ஆன்டிராய்டில் கெஸ்டு மோடு செட் செய்வது எப்படி
நீங்கள் பயன்படுத்தும் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை சிறிது நேர பயன்பாட்டிற்கு மற்றவர்களிடம் கொடுக்கும் நிலமை நிச்சயம் ஏற்படலாம், அவ்வாறு கொடுக்கும் போது உங்களது குறுந்தகவல், மற்றும் இதர முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களின் பாதுகாப்பிற்கு எவ்வித உத்திரவாதமும் கிடையது.
நல்ல விதமாக ஆன்டிராய்டு லாலிபாப் 5.0 பயன்படுத்துபவர்களுக்கு இந்த நிலை ஏற்படாது, ஏனெனில் இதில் சிஸ்டம்-லெவல் கெஸ்டு மோடு உள்ளது. இதன் மூலம் எளிதாக கெஸ்டு ப்ரோஃபைலுக்கு மாற்ற முடிவதோடு உங்களது தகவல்களுக்கும் பாதுகாப்பாக இருக்கின்றது, மற்றவர்களிடம் போனை வழங்கும் போது இம்முறை மிகவம் உதவியாக இருக்கும். கீழ் வரும் ஸ்லைடர்களில் ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்கும் ஸ்மார்ட்போனில் கெஸ்டு மோடை எப்படி செட் செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்..

நோட்டிபிகேஷன்
ஸ்கிரீனின் மேல் புறத்தில் இருந்து கீழாக ஸ்வைப் செய்யுங்கள்

அவதார்
வலது புறத்தில் இருக்கும் யூஸர் அவதாரை க்ளிக் செய்ய வேண்டும்.

ஐகான்
இங்கு கூகுள் அக்கவுன்டு, ஆட் கெஸ்டு மற்றும் ஆட் யூஸர் என மூன்று ஐகான்கள் இருக்கும்.

கெஸ்டு
ஆட் கெஸ்டு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.

கெஸ்டு மோடு
இப்பொழுது போனில் கெஸ்டு மோடு ஆன் செய்யப்பட்டிருக்கும். இந்த சமயத்தில் போன் சற்று வேகம் குறைவாக இருக்கும், ஆனால் சிறிது நேரத்தில் வேகம் சீராக இருக்கும்.

கூகுள் அக்கவுன்டு
கெஸ்டு மோடில் இருந்து எளிதாக கூகுள் அக்கவுன்டிற்கு மாற முடியும். இதற்கு செய்முறை 1 மற்றும் 2 பின்பற்றி கூகுள் அக்கவுன்டு என்ற ஐகானை க்ளிக் செய்ய வேண்டும், இவ்வாறு செய்யும் போது கெஸ்டு மோடில் இருக்கும் அனைத்து தகவல்களும் தானாக அழிக்கப்பட்டு விடும்.

லாலிபாப்
ஒரு வேலை உங்களது ஸ்மார்ட்போனில் ஆன்டுராய்டு லாலிபாப் 5.0 இல்லை என்றால் போனில் ஏற்கனவே இருக்கும் கெஸ்டு மோடை பயன்படுத்தலாம். சியோமி, எல்ஜி, சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்களின் போன்களில் கெஸ்டு மோடு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கேற்ற வகையில் கெஸ்டு மோடு அல்லது கிட்ஸ் மோடு என அவைகளை பெயரிட்டிருக்கலாம். இவை பொதுவாக செட்டிங்ஸ் >> ஜெனரல் >> ப்ரைவஸி >> கெஸ்டு மோடு சென்று செட் செய்யலாம்.

அம்சம்
ஒரு வேலை நீங்கள் பயன்படுத்தும் போனில் இந்த அம்சம் இல்லை என்றால் குறிப்பிட்ட சில செயலிகளை மட்டும் பாஸ்வேர்டு மூலம் லாக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications