தகவல்களை பாதுகாப்பாக அழிப்பது எப்படி.??

By Aruna Saravanan
|

உங்கள் பழைய போனை விற்க போகின்றீர்களா. உங்களுடைய எல்லா தனிப்பட்ட சேகரிப்புகளும் நீங்கி விட்டதா என்று பார்த்து பின் விற்க வேண்டும். ஆண்ட்ராய்டு போனில் இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்.

மைக்ரோ எஸ்டி கார்டு

மைக்ரோ எஸ்டி கார்டு

உங்களது பழைய போனில் மைக்ரோ எஸ்டி கார்டு இருந்தால் உங்கள் புதிய போனில் அதை நுழைத்து பயன்படுத்தவும். போட்டோ, வீடியோ போன்ற முக்கியமான தரவுகள் தெரியாமல் இடம் மாறி செல்லக்கூடும்.

பேக்கப்

பேக்கப்

உங்கள் புதிய போனில் மைக்ரோ எஸ்டி கார்டு இல்லையென்றால் அதோடு நீங்கள் சில காரணங்களுக்காக போனில் உள்ள தரவுகளை டெலீட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தால் முதலில் உங்களது எல்லா போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பேக்கப் செய்ய வேண்டும்.

யுஎஸ்பி

யுஎஸ்பி

யுஎஸ்பி கேபிலை பயன்படுத்தி கணினியில் உங்கள் போனை இணைக்க வேண்டும். நீங்கள் மேக் கணினி பயன்படுத்தினால் இதை செய்வதற்கு முன்பு ஆண்ட்ராய்டு ஃபைல் டிரான்ஸ்ஃபர் ( Android File Transfer ) நீங்கள் நிறுவி இருக்க வேண்டும்.

எஸ்டி கார்டு

எஸ்டி கார்டு

எஸ்டி கார்டில் இருந்து உங்கள் கணினியில் சேமிக்க வேண்டிய எல்லாவற்றையும் காப்பி செய்யவும். காப்பி செய்தவுடன் உங்கள் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விடவும். அடுத்து உங்கள் மெமரி கார்டை ஃபார்மேட் செய்து கொள்ளலாம்.

செட்டிங்

செட்டிங்

முதலில் போனின் செட்டிங்ஸ் > ஸ்டோரேஜ் சென்று இரேஸ் எஷ்டி கார்டு ( Erase SD card ) என்பதை அழுத்தவும். உங்கள் கார்டின் எல்லா தரவுகளையும் இழக்கின்றீர்கள் என்ற எச்சரிக்கை வாக்கியத்தை காண்பீர்கள்.

உறுதி

உறுதி

தொடர்வதற்கு Erase SD card பட்டனை அழுத்தவும். உங்கள் எஸ்டி கார்டு கடவுசொல்லால் பாதுகாக்கப் பட்டிருந்தால் அதற்கான பாஸ்வேர்டு கொடுத்து திறக்கவும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஒரு கை தேர்ந்த நபரால் இதற்கு பிறகும் உங்கள் formatted Sd கார்டில் இருந்து கோப்புகளை எடுக்க முடியும். ஆனால் இதை சரி செய்யும் சரியான வழி "layering". இதற்கு காலியான இடத்தில் ஏதாவது ஒன்றை நிரப்பவும், பின் டெலீட் செய்யவும். அதன் பின் இதையே ஒரு சில முறை செய்தால் ஒரிஜினல் தரவு காணாமல் போகும்.

வழி முறை

வழி முறை

ஒரு வேளை 2ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு இருந்து அதை நீங்கள் அழித்திருந்தால் அதை உங்கள் கணினியுடன் இணைக்கவும். கார்டுக்கு உங்கள் கோப்பை காப்பி செய்யவும். கோப்பை டெலீட் செய்யவும். இதையே இரண்டு அல்லது மூன்று முறை செய்யவும். இதை செய்ய 10 நிமிடத்திற்கு மேல் ஆகாது. ஆனால் அதன் பின் உங்கள் கார்டை பாதுகாப்பாக விற்க முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Read here in Tamil How to Delete All Data From Your Android Phone Securely.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X