ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்ய டிப்ஸ்!!!

|

இன்று நம் அன்றாட வாழக்கையில் நாம் அதிகம் பயன்படுத்தும் சாதனங்களாக ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்கள் மாறி வருகின்றன. எப்பொழுதும் கையில் போன் உடன் இருப்பது நம் மக்களுக்கு ஒரு பழக்க தோஷம் ஆகிவிட்டது.

குறிப்பாக இளம் வயதினர் கையில் எப்பொழுதும் போன்களுடன் தான் இருக்கிறார்கள். இப்படி நம் அன்றாட வாழ்க்கையில் நாம் அதிகம் பயன்படுத்தும் சாதனங்களான ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் சுத்தமாக இருக்கிறதா என்பது பற்றி நாம் அதிகம் அக்கறை கொள்வதில்லை.

டேப்லெட்கள் மற்றும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் டச் ஸ்கிரீன் கொண்டுதான் வருகின்றன. மக்களும் டச் ஸ்கிரீன் கொண்ட சாதனங்களையே அதிகம் விரும்புகின்றனர். ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெடின் டச் ஸ்கிரீனை சுத்தம் செய்ய சில டிப்ஸ்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மைக்கிரோ பைபர் துணி

மைக்கிரோ பைபர் துணி

ஸ்கிரீனை சுத்தம் செய்ய மென்மையான துணிகளை பயன்படுத்துவது நல்லது. மைக்கிரோ பைபர் துணியை பயன்படுத்துவது இன்னும் சிறப்பு. டவல் மற்றும் பேப்பர் போன்றவைகளை பயன்படுத்த வேண்டாம்.

மைக்கிரோ பைபர்

மைக்கிரோ பைபர்

ஸ்கிரீனில் கறை எதாவது இருந்தால் அதை சுத்தம் செய்வதற்க்கு முன் போனை சுச் ஆப் செய்து பேட்டரியை கழட்டி வைத்து விட வேண்டும்.

பின்பு மைக்கிரோ பைபர் துணியை தண்ணீரில் நினைத்து ஸ்கிரீனை துடைக்க வேண்டும். பின்னர் ஈரம் படாத துணியின் பாகத்தை கொண்டு ஈரத்தன்மையை துடைக்க வேண்டும். ஈரத்தன்மை போனின் மைக் மற்றும் ஸ்பீக்கர் போன்ற பகுதிகளில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கெமிக்கல்

கெமிக்கல்

வீட்டிற்க்கு பயன்படுத்தும் கிளீனர்கள் அல்லது வேறு எதாவது கெமிக்கல்களை வைத்து போனின் ஸ்கிரீனை சுத்தம் செய்ய கூடாது. அப்படி செய்தால் அந்த கெமிக்கல்கள் ஸ்கிரீனில் உள்ள கோட்டிங்கை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது. இதற்கென பிரித்தியேகமாக தயாரிக்கப்படும் கிளீனர்களை வேண்டுமானால் பயன்படுத்தலாம்.

போன்

போன்

போன்கள் ஈரமாகி விட்டால் உடனடியாக போனை சுச் ஆப் செய்து பேட்டரியை கழட்டி வைத்து விட வேண்டும். போனில் உள்ள ஈரத்தன்மை உளர ஏதுவான இடத்தில் இதை வைக்க வேண்டும்.

ஹேர் டிரையரோ அல்லது மைக்ரோ ஓவனோ கொண்டு போனை காய வைக்க முயற்ச்சிக்க வேண்டாம். போனை உளர வைப்பதற்கென பிரித்தியேகமான சாதனங்கள் ("Dry-All First Aid Kit") இப்பொழுது உள்ளன அவைகளை பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X