கேஸ் சிலிண்டரை ஆன்லைனில் பதிவுசெய்வது எப்படி?

By Jeevan
|

சமையல் எரிவாயு இணைப்பானது அனைவரது வீட்டிலும் இருக்கின்ற மிகவும் முக்கியமானது. இது இல்லாவிட்டால் 'புவ்வா' கிடையாது என்பதே நம்மூர் இல்லத்தரசிகளின் ஆடராக இருக்கிறது.

அளவாக பயன்படுத்துகிறார்களோ அல்லது அதிகமாகப் பயன்படுத்திகிரார்களோ, குறிப்பிட்ட தினங்களில் கேஸ் சிலிண்டர் தீர்ந்துவிடுவது சாதாரணம்தான். ஆனால் கேஸ் சிலிண்டரை பதிவுசெய்து அதைப்பெறுவதற்குள் நமக்கும் 'அப்பாடா' என்றே தோன்றிவிடும்.

இந்த சமையல் எரிவுக்கான சிலிண்டரை இணையத்தில் பதிவுசெய்வது எப்படி என்பதைத்தான் இன்று பார்க்க இருக்கிறோம். இந்த கட்டுரையில் பாரத் கேஸ் மற்றும் HP கேஸ் சிலிண்டர்களை எப்படி பதுவுசெய்வது என்பதை விளக்கமாகவே தந்துள்ளோம். தகவல்கள் கீழே!

கேஸ் சிலிண்டரை ஆன்லைனில் பதிவுசெய்வது எப்படி?

கேஸ் சிலிண்டரை ஆன்லைனில் பதிவுசெய்வது எப்படி?

பாரத் கேஸ் சிலிண்டரை ஆன்லைனில் பதிவுசெய்வதற்கு பாரத் கேஸ் இணையதளம் சென்று உங்களுக்கான கணக்கை தொடங்குங்கள். அப்பொழுது வாடிக்கையாளர் எண் மற்றும் பாரத் கேஸ் ஏஜென்சியின் எண்ணையும் கொடுக்கவேண்டும்.

உங்களுக்கான கணக்கை தொடங்கியபின், அதே தளத்தில் மீண்டும் லாகின் செய்து, உங்களுக்கான பாரத் கேஸ் சிலிண்டரை பெறலாம்.

கேஸ் சிலிண்டரை ஆன்லைனில் பதிவுசெய்வது எப்படி?

கேஸ் சிலிண்டரை ஆன்லைனில் பதிவுசெய்வது எப்படி?

பாரத் கேஸ் சிலிண்டரை SMS மூலமாகவும் பெறமுடியும். ஆனால் இந்த சேவையானது சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற மெட்ரோ நகரங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

முன்னரே சொன்னதைப்போல், அந்த தளத்தில் கணக்கைதொடங்கும்பொழுது உங்களுடைய மொபைல் எண்ணுக்கான படிவத்தை நிரப்பியிருந்தால் இந்தச்சேவையையும் பெறலாம்.

உங்கள் மொபைல் போனிலிருந்து, REG என டைப்செய்து இடைவெளிவிட்டு SAPcode என்ற எண்ணை டைப்செய்து, பின்னர் உங்களுடைய வாடிக்கையாளர் எண்ணை கொடுத்து அதை 57333 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்கள். மேலும் விவரங்களுக்கு பாரத் கேஸ் இணையதளம் செல்க!

கேஸ் சிலிண்டரை ஆன்லைனில் பதிவுசெய்வது எப்படி?

கேஸ் சிலிண்டரை ஆன்லைனில் பதிவுசெய்வது எப்படி?

நீங்கள் HP கேஸ் வாடிக்கையாளராக இருந்தால், உடனே HP கேஸ் இணையதளத்தில் உங்களை பதிவுசெய்துகொள்க!

மேலும் இந்தப்பக்கம் சென்று பயனாளர் ஈமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல்லைக்கொடுத்து உள்நுழைக்க. நீங்கள் தேவையான தகவல்களைக்கொடுத்து உங்களுக்கான சிலிண்டரை பதிவுசெய்யலாம், புதிதாக இணைப்பும் பெறலாம்.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X