ஸ்மார்ட்போன் பேட்டரியை அதிகரிக்க கருப்பு நிறம் போதும்.!!

By Aruna Saravanan
|

ஸ்மார்ட்போன்களில் அதிக அளவு பேட்டரி பயன்பாட்டை இழுப்பது டிஸ்ப்ளே தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வால்பேப்பரே பேட்டரியின் பயன்பாட்டை கூட்டவும் குறைக்கவும் செய்கின்றது என்பதை அறிவீர்களா.

அடர்ந்த கருமை நிற வால்பேப்பர் பயன்படுத்துவதால் பேட்டரியை சேமிக்க முடியும். இது நீங்கள் பயன்படுத்தும் திரையை பொருத்து அமைகின்றது. ஸ்மார்ட்போன் உலகத்திலிருக்கும் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தை நன்கு தெரிந்து கொண்டால் கருப்பு வால்பேபரின் மகத்துவம் உங்களுக்கு புரியும். அதை பற்றி இங்கு காண்போம்.

LCD

LCD

எல்சிடி என்பது Liquid Crystal Display என்று பொருள்படும். உங்கள் டிவி மற்றும் மானிட்டர்களில் காணும் தொழில்நுட்பத்தை ஒத்த நுட்பத்தை இதிலும் காண முடியும். இவை இவற்றின் பெயரை போன்று இயல்பில் கிரிஸ்டலாக இருக்கின்றது. இவைகள் தாமாக ஒளியை உமிழ்வதில்லை, மாறாக அவர்களுக்கு பின்னால் ஒரு ஒளி மூலத்தில் இருந்து ஒளியை பரப்புகின்றன.
அதாவது, நீங்கள் ஸ்மார்ட்போனில் பார்க்கும் கருப்பு நிறமானது உண்மையில் பின்னால் இருந்து வரும் கருப்பு வெளிச்சம். ஆகவே எல்சிடியின் டிஸ்ப்ளே உண்மையாக கருப்பு நிறத்தில் இல்லை. எல்ஜி, எக்ஸ்பீரியா இசட்3 போல நெக்சஸ் 5வும் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டது.
எல்சிடியின் ஒவ்வொரு பிக்ஸலும் ஒளியூட்ட பட வேண்டியிருப்பதால் இயல்பாகவே இவை அதிகமாக பவர் இழுக்கும்.

02. AMOLED & OLED

02. AMOLED & OLED

ஏஎம்ஓஎல்ஈடி என்றால் Active-Matrix Organic Light-Emitting Diode என்று பொருள் படும். இதுவும் தொலைகாட்சிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது ஆனால் அதிகமாக ஸ்மார்ட்போனில் பார்க்க முடியும். ஓஎல்ஈடி பயன்பாடும் இதை ஒத்ததுதான் இருந்தும் Active Matrixஆக பயன்படுத்த படுவதில்லை.

ஆர்கானிக் தரவுகளால் உறுவாக்கப்பட்ட இந்த திரை இதை மின்சாரம் ஊடுறுவி செல்லும் பொழுது ஒளி எழுப்புகின்றது. இதை electroluminescence என்று கூறுகின்றனர். ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே உங்கள் பேட்டரிக்கு பயன்படுத்த சுலபமாக இருக்கின்றது, ஏனென்றால் ஒவ்வொரு பிக்ஸலுக்கும் ஒளியூட்ட வேண்டியதில்லை. இவற்றில் கருப்பு வெளிச்சம் இல்லை என்பதால் உண்மையான கருப்பு நிறத்தை காட்டுகின்றது.

03. ஏஎம்ஓஎல்ஈடி

03. ஏஎம்ஓஎல்ஈடி

இது எங்கு போகின்றது என்று உங்களால் பார்க்க முடியலாம். உங்களிடம் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே இருந்தால் கருப்பு வால்பேப்பர் அதிலும் அடர்ந்த கருமை நிறம் கொண்டவைகளை பயன்படுத்தும் போது அதிக அளவில் பேட்டரியை சேமிக்க முடியும்.
XDA Developersஐ சேர்ந்த எங்கள் நண்பர்கள் சில சோதனைகளை செய்துள்ளனர். அதன்மூலம் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளேயில் கருப்பு நிற வால்பேப்பர் 20 சதவிகித பிரகாசத்தில் பயன்படுத்தும் போது பேட்டரியின் ஆயுளை 6 சதவிகிதம் சேமிக்க முடியும் என்றும் முழு பிரகாசத்தில் 8 சதவிகிதம் சேமிக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர்.
இந்த முடிவுகள் always-on screenஐ அடிப்படையாக கொண்டுள்ளன. ஆனால் இதன் அடிப்படை கோட்பாடு ஒலிதான்.

 எல்சிடி

எல்சிடி

எல்சிடி யில் பேட்டரியை சேமிக்கும் வால்பேப்பர் பற்றி அறிய வேண்டுமா. எல்சிடி கருப்பு வெளிச்சத்தை சார்ந்தது. ஆகையால் இதில் பேட்டரியை சேமிக்கும் எந்த வழியும் இருக்காது.
ஒன்று வேண்டுமென்றால் நீங்கள் செய்யலாம், பேட்டரி சேவர் மோடு (Battery Saver Mode)க்கு உங்கள் டிவைஸை செட் செய்து அடிக்கடி திரையை பயன்படுத்துவதை தவிர்த்து விடவும். டிஸ்ப்ளேவின் பிரகாசத்தை முடிந்தவரை கம்மியாகவே வைத்திருக்கவும்.
நல்ல செய்தி என்னவென்றால் நீங்கள் அதிக பிரகாசம் கொண்ட வால்பேப்பர் மற்றும் தீம்களை பேட்டரிக்கு பங்கம் செய்யாமல் பயன்படுத்த முடியும்.

பேட்டரி டிப்ஸ்

பேட்டரி டிப்ஸ்

ஏஎம்ஓஎல்ஈடி பயன்படுத்துபவர்கள் பேட்டரியின் வாழ்நாளை அதிக நாட்கள் நீட்டிக்கவென்று சில டிப்ஸ் உள்ளது.
நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஆப்ஸ்களின் தோற்றத்தை மாற்ற முடியுமென்றால் உங்கள் பேட்டரியின் ஆயுளை இன்னும் அதிகமாக காப்பாற்ற முடியும். ஹோம் ஸ்கிரீனை விட ஆப்ஸ்களுக்கு தான் நாம் அதிகம் நேரமும் செலவிடுகின்றோம். உங்கள் text மற்றும் ஈமெயில் விருப்பத்திற்கு கறுப்பு பேக்கிரவுன்டை செட் செய்யுங்கள் டிவைஸ் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்ஸ்களுக்கு ஏற்றார் போன்று வெள்ளை நிற text பயன்படுத்தி கொள்ளலாம்.
இதை புரிந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். உங்கள் டிவைஸை முழுவதுமாக சார்ஜ் செய்யுங்கள் பின் அது முழுவதும் நின்று போகும் வரை காத்திருக்கவும் பின் உங்கள் டிவைஸ்க்கு நீங்கள் பயன்படுத்திய பேட்டரியின் அளவை பாருங்கள். அதற்கு செட்டிங் செல்லவும் பின் Device Setting for Battery என்பதற்கு கீழ் பார்க்கவும்.
உங்கள் டிஸ்ப்லே பயன்படுத்திய பேட்டரியின் சதவிகிதத்தை குறித்து கொள்ளவும். பின் போனை ரீசார்ஜ் செய்யும் போது கருப்பு wallpaperக்கு switch செய்து மறுபடியும் இதை செய்து வித்யாசத்தை பாருங்கள்.

05. கருப்பு வால்பேப்பர்

05. கருப்பு வால்பேப்பர்

உங்கள் ஸ்மார்ட்போன் பேக்கிரவுண்டுக்கு கருப்பு வால்பேப்பரை பதிவிறக்கம் செய்யவும், ஆனால் உங்கள் ஆப்சின் தீமை மாற்ற மறந்து விடாதீர்கள் இதனால் உங்கள் பேட்டரியை பாதுகாக்கும் கூறுகளை அதிக அளவு செயல்படுத்த முடியும்.
உங்கள் டிவைஸ்க்கு அடர்ந்த பெரிய தீமையும் செட் செய்ய முடியும். உங்கள் ஸ்கிரீனுடைய டைம் அவுட் (timeout) செட்டிங்கை குறைந்த நேரத்திற்கு செட் செய்யவும். பவர் சேவிங் மோடை செயல்படுத்தவும், ஆட்டோ ப்ரைட்னஸ் (auto-brightness)ஐ அணைக்கவும் பின் உங்கள் பேட்டரியின் நீடித்த உழைப்பை பார்ப்பீர்கள்.
உங்கள் பேட்டரியின் பயன்பாடு அதிகமாக நீங்கள் போனை பயன்படுத்தும் விதத்தை பொருத்தே அமைகின்றது என்றாலும் மேலே கூறியவற்றை செய்வதாலும் கொஞ்சமாவது பேட்டரியை காப்பற்ற முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Read here in Tamil How Black Wallpaper Can Save Your Smartphone Battery.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X