அம்பலம் : முக்கியமான ஆண்ட்ராய்டு பயன்பாடுகள்.!!

By Aruna Saravanan
|

ஆண்ட்ராய்டு போனை வாங்கும் பலர் அதில் இருக்கும் பல செய்திகளையும், பயன்பாடுகளையும் சரியாக அறிந்து கொள்வதில்லை. போனை வாங்கியவுடன் அதை பற்றிய செய்திகளையும் படித்து பயன் அடைய வேண்டும். இதனால் உங்களுக்கும் உங்கள் போனுக்கும் எந்த பாதிப்பும் வராமல் பார்த்து கொள்ள முடியும்.

உங்களுக்கே தெரியாமல் பல விஷயங்கள் இதில் உள்ளது. ஆண்ட்ராய்டு போனை பற்றி யாருக்கும் தெரியாத சில டிப்ஸ்களை காண்போம்.

அறிவிப்பு செட்டிங்கை விரைவாக கவணிக்க

அறிவிப்பு செட்டிங்கை விரைவாக கவணிக்க

சில நேரங்களில் பல வித அறிவிப்புகள் (நோட்டிபிகேஷன்கள்) வருவது எரிச்சல் அடைய செய்யும். இதற்கு ஒரு தீர்வு உண்டு. ட்ராப் டவுன் நோட்டிபிகேஷன் பார்'ஐ (Drop down notification bar) அழுத்தினால் அறிவிப்புக்கு அடுத்து செட்டிங் ஐகான் வரும். அந்த குறிப்பிட்ட ஆப்ஸை பெற நோட்டிபிகேஷனை பெற வேண்டும் அதற்கு அந்த ஐகான் மீது தட்டவும். பிறகு அதிலிருந்து அறிவிப்புகளை நீங்கள் சரி செய்யவோ அல்லது அணைக்கவோ முடியும்.

high contrast text

high contrast text

சிலருக்கு கண் பார்வை மங்கிய காரணத்தால் ஸ்மார்ட் போனில் இருக்கும் வார்த்தைகளை சரியாக படிக்க முடியாது. இதை எளிதாக தீர்க்க ஒரு வழி உள்ளது. செட்டிங் சென்று ஹை காண்ட்ராஸ்ட் டெக்ஸ்ட் (high contrast text) என்பதை செயல் படுத்தினால் (enable) போதும். இதன் பிறகு வார்த்தைகள் பளிச்சென்று தெரியும். படிப்பதற்கும் எளிதாக இருக்கும்.

ஸ்மார்ட் லாக்

ஸ்மார்ட் லாக்

பாதுகாப்பிற்காக அனைவரும் போனை லாக் செய்து வைக்க வேண்டும். இதற்கு நீங்கள் கடவுச் சொல்லை கொண்டு லாக் செய்வீர்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த கடவு சொல்லை பயன்படுத்த அலுப்பாக இருந்தால் அதுவும் நீங்கள் வீட்டில் இருக்கும் பொழுது, ஒரு வழி உள்ளது. ஸ்மார்ட் லாக் உதவி செய்யும். இதற்கு முதலில் செக்யூரிடி செல்லவும், பின்பு ஸ்மார்ட் லாக், பின்பு ட்ரஸ்டெட் ப்ளேசஸ் (trusted places) என்ற இடத்தில் உங்கள் வீட்டின் லொகேஷனை இணைக்கவும். ப்ளூடூத் டிவைஸையும் இதனுடன் இணைக்க முடியும். இதன் பின் நீங்கள் வீட்டில் இருக்கின்றீர்கள் என்பதை அறிந்து அல்லது ட்ரஸ்டெட் டிவைஸில் உங்கள் போன் இணைக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து உங்கள் போன் லாகிற்கான கடவுச் சொல்லை கேட்காது.

சைலன்ட் போனை கண்டுபிடிக்க

சைலன்ட் போனை கண்டுபிடிக்க

உங்கள் போனை சைலன்ட் மோடில் போட்டு பின்பு வைத்த இடத்தை மறந்து விட்டீர்களா. கவலை வேண்டாம். அந்த நேரத்தில் நீங்கள் மற்ற போனில் இருந்து அழைத்தாலும் கண்டு பிடிக்க முடியாது. இதை தீர்க்க எளிமையான வழி உண்டு. http:android.comdevicemanager and login with the same Google ID என்ற IDஐ பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் போன் இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பதுடன் போன் ரிங் அடிப்பதையும் கேட்க முடியும்.

custom reject SMS

custom reject SMS

டயலரை திறந்து போனின் செட்டிங் செல்லவும். மெனுவில் ரிஜெக்ட் வித் எஸ்எம்எஸ் (Reject with SMS option) என்று இருக்கும். இங்கு இன்கம்மிங் காலை நிராகரிக்கும் போது அனுப்பப்பட வேண்டிய முன்பே செட் பண்ணப்பட்ட செய்திகளை நீக்கவோ எடிட் செய்யவோ முடியும்.

Increase Interface speed

Increase Interface speed

செட்டிங் செல்லவும், அதில் அபவுட் போன் (About phone) சென்று மெனுவில் உள்ல பில்டு நம்பர் (Build Number) என்பதை ஏழு முறை தட்டவும். இதனால் செட்டிங்கில் உள்ள டெவலப்பர் ஆப்ஷன் (developer option) செயல் படுத்த படும். விண்டோ அன்டு டிரான்சிஷன் அனிமேஷன் ஸ்கேல் (Window and Transition Animation scale) பெறுவதற்கு கீழே வரவும். அனிமேஷனின் மதிப்பு தானாகவே 1x என்று இருக்கும். அதை 0.5 xக்கு குறைக்கவும். இதனால் வேகத்தை அதிக படுத்த முடியும். அனிமேஷனை நிறுத்தினாலும் வேகத்தை கூட்டமுடியும்.

Automatic Shortcuts

Automatic Shortcuts

உங்கள் ப்ளே ஸ்டோரில் புதியதாக ஆப்ஸ் நிறுவினால் உங்கள் போனின் திரையில் ஒரு குறுக்குவழிக்கான ஐகான் வரும். இது வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால் ப்ளே ஸ்டோரை திறங்கள் மேலே இடது பக்கத்தில் இருக்கும் மூன்று பாரை தட்டவும். பின் செட்டிங்கை திறக்கவும்.

அங்கே ‘Add icon to Home Screen" என்ற ஐகானை காண்பீர்கள். அதன் பக்கத்தில் இருக்கும் குறியை நீக்கவும். இதனால் தானியங்கி குறுக்குவழியை செயல் இழக்கம் செய்ய முடியும்.

 முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Read here in Tamil some Interesting and useful Hidden tricks for your Android smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X