TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
கூகுள் க்ரோம் பயனாளிகளுக்கு இந்த தொகுப்பு பிடிக்கும். இன்று கூகுள் க்ரோம் பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவ்வப்போது கோளாறு செய்தாலும் இன்த ப்ரவுஸரை பயன்படுத்தாமல் யாரும் இருப்பதில்லை.
அப்படியான கூகுளின் க்ரோம் ப்ரவுஸரில் உங்களுக்கு பயன் தரும் சில அம்சங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.
கெஸ்ட் ப்ரவுசிங்
சிலர் உங்கள் லேப்டாப்பை கடன் வாங்கி சென்று உங்கள் facebook மற்றும் மற்ற தனிப்பட்ட கணக்குகளை ஆராய்வார்கள். இதை தவிர்க்க Guest mode பயன்படுத்தவும். எனேபிள் கெஸ்ட் ப்ரவுசிங் ( Enable guest browsing ) என்பதை செயலாக்கம் செய்வதன் மூலம் இதை செயல் படுத்த முடியும். இந்த பாக்ஸில் ஒரு டிக் மார்க் கொடுக்க வேண்டும் அவ்வளவுதான். இதற்கு மேலே வலது பக்கத்தில் உள்ள யூஸர்நேம் ( username ) சென்று Switch person என்பதை தேர்வு செய்து ப்ரவுஸ் ஆஸ் கெஸ்ட் ( Browse as Guest ) என்று தேர்வு செய்யவும்.
புக் மார்க்ஸ்
க்ரோமின் புக்மார்க் பாரில் உங்களுக்கு பிடித்தமான சைட்களை வைத்து கொள்ளலாம். இதற்கு புக்மார்க் மேனேஜரில் க்ரோம் சென்று பொருத்தமான புக்மார்க் எண்ட்ரீக்களை எடிட் செய்து பின் டைட்டில் இடத்தில் உள்ள தரவுகளை நீக்கவும்.
ஆம்னிபாக்ஸ்
க்ரோமின் ஆம்னிபாக்ஸில் பல ரகசிய அம்சங்கள் உள்ளன. அதில் ஒன்று விரைவில் கணக்கு போடும். இதற்கு கூகுள் தேடல் தேவையில்லை. சுலபமாக ஏதாவது ஒரு கணக்கை போட்டு எண்டர் தட்டினால் போதும் அதற்கான விடை கிடைத்து விடும். இதனால் வெப்பம், தூரம் மற்றும் கனத்தையும் அளக்க முடியும்.
Word definitions
கூகுள் டிக்ஷனபி யூட்டிலிட்டி ( Google Dictionary Utility ) நமக்கு மிகவும் பயன் அளிக்கும் விதமாக உள்ளது. இதை ஒரு முறை நிறுவினால் போதும் க்ரோமின் உள் டபுள் கிலிக் செய்து குறிப்பிட்ட வார்த்தைக்கான அர்த்தத்தை பெற முடியும். அந்த வார்த்தைகளுக்கான விளக்கத்தை pop-up விண்டோவில் பெற்று கொள்ளலாம். அதனுடன் வரும் லிங்கை பயன்படுத்தி அந்த வார்த்தையை பற்றி மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
டாஸ்க் மேனேஜர்
க்ரோமுக்கு என்று தனியாக டாஸ்க் மேனேஜர் ( task manager ) உண்டு. மோக் டூல்ஸ் மெனுவை ( More Tools Menu) ஓபன் செய்து அனைத்து டேப்ஸ் மற்றும் அவை பயன்படுத்திய ரிசோர்சஸ் ( Resources ) பற்றிய விவரத்தை அறிய முடியும். பிரச்சனைகளை டிரபுல்ஷூட் ( troubleshoot ) செய்வதற்கும் டாஸ்க் மேனேஜர் உதவி செய்யும்.
அனைத்தையும் சின்க் செய்ய வேண்டாம்
க்ரோமை பயன்படுத்துவதால் பல நன்மைகள் உண்டு. அதில் முக்கியமானது என்னவென்றால் கூகுளுடன் இணைந்து நம் கூகுள் கணக்குகள் பற்றிய தகவல்களை தெளிவாக கொடுப்பது. அதாவது நம் பாஸ்வேர்டு மற்றும் ப்ரவுசிங் வரலாறு பற்றிய தகவல்கள் சேமிக்க படுகின்றன. ஆகையால் நீங்கள் எல்லாவற்றையும் சின்க் செய்ய தேவையில்லை.
புக்மார்க்
சில நேரத்தில் ப்ரவுசிங் செஷன் ( browsing session ) முழுவதையும் நீங்கள் சேமிக்க வேண்டி இருக்கும். உங்கள் குறிப்பிக்கு இது மிகவும் அவசியம். இதை திரும்ப பெறுவதற்கு புக்மார்க் மேனேஜர் ( bookmark manager ) சென்று சேவ் செய்த எல்லா சைட்களையும் தேர்வு செய்யவும். பிறகு வியூ பட்டனை க்ளிக் செய்து மற்றொரு டேப் மூலம் ரீலோட் செய்யவும்.
க்ரோமை மீடியா
பல பொதுவான வீடியோ, ஆடியோ மற்றும் போட்டோக்களை க்ரோம் மூலம் பார்க்க முடியும். க்ரோம் ஆன் ஸ்கிரீன் இன்டர்ஃபேஸ் கூறுகளை குறைந்த அளவில் வைப்பதால் ப்ரவுஸர் டேபில் படத்தை திறந்து பார்க்கலாம்.
மேலும் படிக்க :
டச் ஸ்கிரீனினை சுத்தம் செய்வது எப்படி??
ஸ்மார்ட்போன் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.??
ஆன்லைன் ஷாப்பிங்.! கவனமாக இருப்பது எப்படி.??
தமிழ் கிஸ்பாட் :
மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!