ஸ்மார்ட்போன் ஆயுளை இரு மடங்கு அதிகரிக்கும் ஆப்ஸ்.!!

By Aruna Saravanan
|

தற்பொழுது வரும் பல ஸ்மார்ட்போன்கள் பல வித செயல்களை புரிவதில் திறன் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. இதனால் பிரச்சனை என்னவென்றால் பேட்டரி அடிக்கடி தீர்ந்து போவதுதான். இத்தனை செயல்களையும் உங்கள் ஆண்ட்ராய்ட் போன் புரிய வேண்டுமென்றால் அதன் பேட்டரி நல்ல முறையில் இருத்தல் அவசியம்.

அப்படி அடிக்கடி சார்ஜ் போகும் பேட்டரியால் போனுக்கும் ஆபத்து இருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள். நம் அவசர காலத்தில் போனை எடுக்கும் போது சார்ஜ் இல்லையென்றால் எவ்வளவு பிரச்சனை என்று உங்களுக்கே தெரியும்.

சில நேரங்களில் ஆண்ட்ராய்ட் போன்களின் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக அதிக நேரம் பிடிக்கின்றது. இதை தீர்பதற்கென்றே பல ஆப்ஸ் அதாவது பயன்பாடுகள் வந்துள்ளன. அவற்றை பற்றி இங்கு காண்போம்.

ஜூஸ் டிஃபென்டர் (Juice Defender)

ஜூஸ் டிஃபென்டர் (Juice Defender)

ஆண்ட்ராய்ட் போனின் பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க தயாரிக்கப்பட்ட ஆப் தான் இந்த ஜூஸ் டிஃபென்டர். பேட்டரியை செயல் இழக்க செய்யும் 3G/4G தொடர்பு மற்றும் வைபை போன்றவற்றை அவ்வபோது சரிபார்த்து பேட்டரியை நீடித்து உழைக்க செய்வதில் கில்லாடி தான் இந்த ஆப். இந்த செயலியின் உதிவியோடு மொபைலின் தரவுகள் சரிபார்க்கவும், வைபை மற்றும் சிபியு (CPU) வின் வேகத்தை கூட்டவும், சில குறிப்பிட்ட ஆப்ஸை செயல் படுத்தவும், செயல் இழக்க செய்யவும் என பல செயல்களை செய்கின்றது.

க்ரீனிஃபை (Greenify)

க்ரீனிஃபை (Greenify)

ஸ்மார்ட்போன் பேட்டரியின் ஆயுளை நீடிக்க கிரீனிஃபை மிக முக்கிய பங்கை வகிக்கின்றது. இது உங்கள் போனின் ஆப்ஸை நீங்கள் பயன்படுத்தாத போது கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றது. இதனால் உங்கள் போன் அடிக்கடி செயல் இழந்து போகாமலும் பேட்டரி அடிக்கடி குறைந்து போகாமலும் இருக்க உதவும்.

கோ பேட்டரி சேவர் (Go Battery saver and power widget )

கோ பேட்டரி சேவர் (Go Battery saver and power widget )

இந்த செயலி ஒரு கைதேர்ந்த பவர் மேனேஜர். பேட்டரியை பாதுகாக்க இது ஒரு சிறந்த பயன்பாடு. இதனால் உங்கள் பேட்டரியின் ஆயுளை நீடிக்க வைக்க முடியும். பவரை நீண்ட நேரத்திற்கு சேமிக்கவும், திறமையாக சேமிக்கவும், பேட்டரியின் பயன்பாட்டை கட்டுக்குள் வைக்கவும் இந்த ஆப் உதவுகின்றது.

கிரீன் பேட்டரி சேவர் (Green Battery Saver and Manager )

கிரீன் பேட்டரி சேவர் (Green Battery Saver and Manager )

இந்த செயலி உங்கள் ஸ்மார்ட் சாதனத்தோடு இணைந்து செயல் புரிகின்றது. இதனால் உங்கள் பேட்டரியின் ஆயுள் நீடிக்கப் படுகின்றது. இதை மிகவும் அழகாக வடிவமைத்துள்ளனர். இந்த ஆப் உங்கள் பேட்டரியின் நண்பன்.

டியு பேட்டரி சேவர் (DU Battery Saver)

டியு பேட்டரி சேவர் (DU Battery Saver)

இது ஒரு இலவச பேட்டரி சேமிக்கும் பயன்பாடு. இந்த ஆப் உங்கள் பேட்டரி நீடித்து உழைக்க உதவுகின்றது. இதன் உதவியுடன் உங்கள் ஆண்ட்ராய்டு போனுக்கு கூடுதலாக 50 சதவிகித ஆயுளை கொடுக்க முடியும். இந்த செயலியை கொண்டு பேட்டரியின் பவர் மேனேஜ்மெண்டை ப்ரீசெட் செய்யவும், பேட்டரியை நல் முறையில் சார்ஜ் செய்யவும், பேட்டரியில் வரும் பிரச்சனைகளையும் தீர்க்கவும் முடியும்.

அவாஸ்ட் பேட்டரி சேவர் (Avast Battery Saver)

அவாஸ்ட் பேட்டரி சேவர் (Avast Battery Saver)

இந்த செயலி உங்கள் போனின் பின்புலத்தில் என்ன நிகழ்கின்றது என்பதை கண்டறிவதுடன், டிவைஸை வேகப்படுத்தவும், பேட்டரியை அதிக நேரம் உழைக்க செய்யவும் உதவுகின்றது. இதனால் நாள் முழுவதும் இண்டெர்நெட் பயன்படுத்தவும், திரையை பிரகாசமாக காட்டவும் பேட்டரியை இயங்க செய்யகின்றது. இந்த ஆப் ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்கு மேல் உள்ள போன்களில் பயன்படுத்த முடியும்.

பவர் ப்ரோ

பவர் ப்ரோ

உங்கள் ஆண்ட்ராய்டு டிவைஸில் பேட்டரியால் வரும் பிரச்சனைகளை தீர்க்கவும், அதிகமாக பவர் எடுத்து கொள்வதை தவிர்க்கவும் இந்த ஆப் உதவுகின்றது. இதன் அறிவுபூர்வமான கூறுகள் உங்கள் பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க உதவுகின்றது. இதன் உதவியால் உங்கள் டிவைஸ் அதிக நாட்கள் உழைக்கவும், பேட்டரியின் சக்தியை நீட்டிக்கவும் உதவுகின்றது.

பேட்டரி ஆப்டிமைஸர் (Battery Optimizer and Cleaner)

பேட்டரி ஆப்டிமைஸர் (Battery Optimizer and Cleaner)

உங்கள் ஆண்ட்ராய்ட் போன் மற்றும் டேப்லெட்டில் வரும் பல வித பிரச்சனைகளை இந்த ஆப் கொண்டு தீர்த்து விட முடியும். பேட்டரி ஆப்டிமைசர் 2.0 என்ற இந்த ஆப் பேட்டரியை நீடித்து உழைக்க செய்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு உங்கள் போனின் வேகத்தை அதிகரிக்க செய்வதோடு அதன் மெமரியை (RAM) சுத்தமாக வைக்கவும் உதவுகின்றது. இந்த ஆப் உங்கள் மொபைலின் தரவுக்கான பயன்பாட்டை அடிக்கடி சரி பார்த்து கொண்டே இருக்கவும் உதவும்.

டியு ஸ்பீடு பூஸ்டர் (DU Speed Booster and Antivirus )

டியு ஸ்பீடு பூஸ்டர் (DU Speed Booster and Antivirus )

உங்கள் போனில் உள்ள தேவையில்லாத தரவுகளையும் கோப்புகளையும் நீக்கி சுத்தம் செய்யும் வல்லமை கொண்டது தான் இந்த செயலி. இதன் லாக் உதவியோடு உங்கள் போனை உங்களை தவிர யாரும் பார்க்காத வண்ணம் பார்த்து கொள்ள முடியும். இதை கொண்டு ஆண்ட்ராய்ட் போனை 60 சதவிகித வேகத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்பது கூடுதல் செய்தி.

ஏவிஜி க்ளீனர் மற்றும் பேட்டரி சேவர் (AVG Cleaner and Battery saver)

ஏவிஜி க்ளீனர் மற்றும் பேட்டரி சேவர் (AVG Cleaner and Battery saver)

இந்த ஆப் உங்கள் எஸ்டி கார்டு மற்றும் போன் மெமரி என மற்ற இடங்களில் தேவையில்லாத ஆப்ஸை சரிபார்த்து சுத்தம் செய்யவும், அதிகமாக சேரும் கோப்புகளை நீக்கவும் உதவுகின்றது. இதனால் உங்கள் பேட்டரி அதிக நேரத்திற்கு உழைக்கவும், போன் வேகமாக செயல்படவும் உதவுகின்றது. ஆகையால் உங்கள் மனம் கவர்ந்த பாடல் மற்றும் புகைப்படங்களை நீங்கள் போனில் சேமித்து கொள்ளலாம்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Read here in Tamil how to Double your Android Smartphone's Battery Life using some of the best Apps.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X