இன்டர்நெட்! குழந்தைகள் பத்திரம் நண்பரே...

Posted By:

இன்றைய காலகட்டத்தில் இணையம் இல்லாமல் மனிதனால் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு வந்தி விட்டான் எனலாம்.

மேலும், இன்றைய இணையதளப் பயன்பாட்டில், இன்றைக்கு நாம் அதிகம் கவலைப்படுவது என்னவென்றால் அதில் இயங்கும் ஆபாசமான, கீழ்த்தரமான உணர்வுகளைத் தூண்டும் பாலியல் தளங்களே.

சிறுவர்களுக்கு இவை தடுக்கப்பட வேண்டும் என்பதில் வேறு கருத்து எவருக்கும் இருக்கப் போவதில்லை. இளம் வயதினரும் இந்த தளங்களை அருவருப்பாகவே கருதுகின்றனர்.

மேலும் வீட்டில் நாம் பயன்படுத்தும் போதோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும் போதோ அந்த மாதிரியான தேடல்கள் முற்றிலுமாக வராமல் செய்யலாம் அதற்கும் வழிகள் இருக்கின்றன.

இவற்றை நம் இணையத் தொடர்பில்இருந்து முற்றிலுமாக தடுக்க உள்ள சில வழிகளை இதோ நீங்களே பாருங்கள்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
முதலில் தேடல் இஞ்சினை செட் செய்திடுங்கள்

முதலில் தேடல் இஞ்சினை செட் செய்திடுங்கள்

நாம் தகவல்களைத் தேடும் போதுதான், இது போன்ற ஆபாச தளங்கள், தகவல் பட்டியலில் தலை நீட்டுகின்றன. இதனைத் தடுக்கலாம். எடுத்துக் காட்டாக, கூகுள் தேடல் தளத்தினைப் பயன்படுத்துபவர்கள், http://www.google.com/ familysafety என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

முதலில் தேடல் இஞ்சினை செட் செய்திடுங்கள்

முதலில் தேடல் இஞ்சினை செட் செய்திடுங்கள்

பிங் (Bing) தேடல் தளம் பயன்படுத்துபவர்கள்http://www.bing.com/preferences.aspx; என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். மற்ற தேடல் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள், அந்த தளங்கள் தரும் safety settings சென்று இந்த வசதியைக் காணலாம்.

முதலில் தேடல் இஞ்சினை செட் செய்திடுங்கள்

முதலில் தேடல் இஞ்சினை செட் செய்திடுங்கள்

இதில் உங்கள் வீட்டுச் சிறுவர்கள் யு-டியூப் போன்ற தளங்களை அதிகம் பயன்படுத்துபவனாக இருந்தால், அவற்றையும் "safe" modeல் அமைக்கவும் ஏனேன்றால் தற்போது அதிலும் அதிக அளவு ஆபாச படங்கள் பரவி உள்ளன.

முதலில் தேடல் இஞ்சினை செட் செய்திடுங்கள்

முதலில் தேடல் இஞ்சினை செட் செய்திடுங்கள்

கம்ப்யூட்டர் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் குடும்ப பாதுகாப்பு வசதிகளைப் பயன்படுத்தவும்.விண்டோஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இந்த பாதுகாப்பு வசதிகளைத் தருகின்றன உங்களுக்கு.

இணையத்தில் குடும்ப பாதுகாப்புக்கான சில டூல்கள்

இணையத்தில் குடும்ப பாதுகாப்புக்கான சில டூல்கள்

ஆரம்பத்தில் Parental Control என அழைக்கபட்ட இந்த டூல்ஸ் மூலம், நாம் தேவையற்றவை அல்லது ஆபத்தானவை என்று கருதும் விஷயங்கள் கொண்ட இணையப் பக்கங்கள் கொண்ட தளங்களைத் தடுத்து நிறுத்தும் வடிகட்டிகளை அமைக்கலாம்.

இணையத்தில் குடும்ப பாதுகாப்புக்கான சில டூல்கள்

இணையத்தில் குடும்ப பாதுகாப்புக்கான சில டூல்கள்

பாலியல் மற்றும் ஆபாச தளங்களை மட்டுமின்றி, வன்முறை சார்ந்த தகவல்கள் மற்றும் நாம் வெறுக்கும் பொருள் கொண்ட தளங்கள் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தலாம். நம் சிறுவர்கள் இளைஞர்களாய் வளர்ந்த பின்னர், சில தளங்கள் பார்க்கும் வகையில் இருக்கலாம்.

இணையத்தில் குடும்ப பாதுகாப்புக்கான சில டூல்கள்

இணையத்தில் குடும்ப பாதுகாப்புக்கான சில டூல்கள்

ஆனால், சில தளங்களை நாம் எப்போதும் வெறுக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கும். அவற்றை எப்போதும் நம் கம்ப்யூட்டரில் தோன்றாதபடி அமைக்கலாம். இதற்கான வடிகட்டிகளைத் தேடிப் பார்த்து, நமக்குத் தேவையானதைப் பார்த்து பயன்படுத்த வேண்டும்.

இணையத்தில் குடும்ப பாதுகாப்புக்கான சில டூல்கள்

இணையத்தில் குடும்ப பாதுகாப்புக்கான சில டூல்கள்

இந்த டூல்ஸ்களை நாம் மற்றும் நம் குடும்பத்தினர் பயன்படுத்தும், இணைய இணைப்பினைத் தரும் அனைத்து சாதனங்களிலும் இன்ஸ்டால் செய்திட வேண்டும்.கம்ப்யூட்டர், கேம் கன்ஸோல், மொபைல் போன், டேப்ளட் பிசிக்கள், பெர்சனல் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் என அனைத்திலும் இவை இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும். சில டூல்ஸ்கள், இந்த அனைத்து வகை சாதனங்களிலும் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். சில லேப்டாப் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் மட்டும் இயங்கும்படி இருக்கும்.

 சிறுவர்களின் பிரவுசர் ஹிஸ்டரியை கண்காணியுங்கள்

சிறுவர்களின் பிரவுசர் ஹிஸ்டரியை கண்காணியுங்கள்

சிறுவர்கள் பயன்படுத்தும் பிரவுசரின் ஹிஸ்டரியை, குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணிக்க வேண்டும். இப்போதெல்லாம் பாலியல் தளங்களில், பாலியல் சார்ந்த செயல்பாடுகளை, மூடி மறைக்கும் வகையில் சாதாரண சொற்கள் கொண்டு குறிக்கின்றனர்.இவற்றை எல்லாம் கண்காணித்து, வடிகட்டிகளில் இவற்றைக் கொடுத்து அவற்றையும் தடை செய்திடும் வகையில் அமைக்க வேண்டும்.

 சமூக வளைதளங்களில் கவனம் தேவை

சமூக வளைதளங்களில் கவனம் தேவை

உங்கள் பிள்ளைகள் பயன்படுத்தும் சமூக வளைத்தளங்களில், அவர்கள் தொடர்பு கொள்ளும் நண்பர்கள் வட்டத்தினைக் கண்காணிக்கவும். மிகவும் நெருக்கமான, நம்பிக்கையுள்ள நண்பர்களை மட்டும் இந்த வட்டத்தில் வைக்கவும்.

ஏனென்றால், நண்பர்கள் என்ற போர்வையில், முதலில் சாதாரணமாக அஞ்சல் தகவல்களைப் பரிமாறிக் கொண்ட பின்னர், பாலியல் தளங்களுக்கு உங்கள் பிள்ளைகளை இழுத்துச் சென்று, அவர்களிடம் பணம் பறிக்கும் வேலையில் நிறைய பேர் இப்போது சமூகத் தளங்களில் இயங்கி வருகின்றனர்.

பிள்ளைகளின் மொபைல் போட்டோக்கள் மேலோட்டமாக பாருங்கள்

பிள்ளைகளின் மொபைல் போட்டோக்கள் மேலோட்டமாக பாருங்கள்

உங்கள் பிள்ளைகள் பயன்படுத்தும் மொபைல் போன்களில் உள்ள போட்டோக்களை அவ்வப்போது கண்காணிக்கவும். இந்த சோதனையை, சோதனை ரீதியில் இல்லாமல், நட்பு ரீதியில் மேற்கொள்ளவும்.

"நம் பெற்றோர்கள், நம் மொபைல் போன்களை அவ்வப்போது பார்ப்பார்கள்" என்ற எண்ணம் அவர்கள் மனதில் பதிய வேண்டும். "அப்படி பார்ப்பது நல்லதுதான்" என்று அவர்கள் கொள்ள வேண்டும்.

பிள்ளைகளின் மொபைல் போட்டோக்கள் மேலோட்டமாக பாருங்கள்

பிள்ளைகளின் மொபைல் போட்டோக்கள் மேலோட்டமாக பாருங்கள்

தொழில் நுட்ப ரீதியாக நீங்கள் அமைக்கும் வடிகட்டிகள், கண்காணிப்புகள் மட்டுமே, உங்கள் குழந்தைகளை பாலியல், வன்முறை, வெறுப்பு ஆகியவற்றை வளர்க்கும் தளங்கள் பக்கம் செல்லாமல் தடுக்கும் என்று எண்ண வேண்டாம்.

உங்கள் பிள்ளைகளிடம் இதனால் ஏற்படுத்தும் ஆபத்து, இது போல பிறருக்கு நேர்ந்தது போன்றவற்றை எடுத்துக் கூறவும். உங்கள் மனைவியுடன் அவர்களையும் அமர வைத்து, இதனால் ஏற்படும் தீங்குகளை, வாழ்க்கை பாதிப்புகளை, மற்றவர்களுக்கு நேர்ந்தவற்றை அவ்வப்போது எடுத்துக் கூற வேண்டும். இந்த அன்பு கலந்த எச்சரிக்கை தான் அவர்களுக்கு நல்ல வழியைக் காட்ட முடியும்.

பிள்ளைகளின் மொபைல் போட்டோக்கள் மேலோட்டமாக பாருங்கள்

பிள்ளைகளின் மொபைல் போட்டோக்கள் மேலோட்டமாக பாருங்கள்

எவ்வளவு கண்காணிப்புகள் இருந்தாலும் குழந்தைகளை நாம் நட்பாக மற்றும் மனம் விட்டு பேசுங்கள் இவர்கள் குழந்தைகள் தானே இவர்களுக்கு என்ன தெரிய போகிறது என்று எண்ணி அவர்களுடன் எதை பற்றியும் பேசாமல் இருந்து விடாதீர்கள் பின்னாளில் அதுவே உங்களுக்கு பெரும் பிரச்சனையாக வரும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்