சாம்சங் கேலக்ஸி எஸ்5 ஸ்மார்ட்போனில் இந்த பிரச்சனைகள் இருக்கின்றதா, இதை செய்தால் போதுமானது

By Meganathan
|

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்5 ஸ்மார்ட்போனை முதலில் அப்டேட் செய்தது. ஆன்டிராய்டு லாலிபாப் அப்டேட் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்5 பல புதிய அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது, அதே நேரம் இந்த அப்டேட் புதிய பிரச்சனைகளுக்கும் வழிவகுத்தது.

கீழே வரும் ஸ்லைடர்களில் லாலிபாப் அப்டேட் செய்யப்பட்ட கேலக்ஸி எஸ்5 ஸ்மார்ட்போனில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதை எப்படி சரி செய்வது என்பதையும் பாருங்கள்..

பேட்டரி

பேட்டரி

லாலிபாப் அப்டேட் செய்தவுடன் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து விடுகின்றதா, முதலில் போனில் அதிக பேட்டரியை பயன்படுத்தும் செயலியை அழித்து விட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள். மீண்டும் இதே பிரச்சனை இருந்தால் அந்த செயலியை அழித்து விட்டு பேட்டரி பயன்பாட்டை பார்க்கலாம்.

வைபை பிரச்சனை

வைபை பிரச்சனை

ஸ்மார்ட்போனில் வைபை கனெக்ட் ஆவதில் பிரச்சனை ஏற்படுவது சகஜம் தான், இதை சரி செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

வால்யூம் அப், பவர் மற்றும் ஹோம் பட்டன்களை ஒன்றாக அழுத்தி பிடிக்க வேண்டும், போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி அடுத்து ஆன்டிராய்டு சிஸ்டம் ரிக்கவரி ஸ்கிரீன் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

அடுத்து வால்யூம் டவுன் பட்டனை க்ளிக் செய்து ‘wipe cache partition' என்ற பட்டனை க்ளிக் செய்து பவர் பட்டனை களிக் செய்ய வேண்டும். அதன் பின் போன் தானாக ரீஸ்டார்ட் ஆகும். அதன் பின் இந்த பிரச்சனை இருக்காது.

ப்ளூடூத் பிரச்சனை

ப்ளூடூத் பிரச்சனை

இது ஓரளவு சிறிய பிரச்சனை தான், இதை சரி செய்ய ப்ளூடூத்தினை ஆஃப் செய்து ஆன் செய்தால் போதுமானது.

சூடு

சூடு

அதிகளவில் போன் சூடாகின்றதா, அப்படியானால் அனைத்து மென்பொருள் மற்றும் செயலிகளும் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.

இயங்குவதில் பிரச்சனை

இயங்குவதில் பிரச்சனை

இதற்கும் முன்பு செய்ததை போல் ஆன்டிராய்டு சிஸ்டம் ரிக்கவரியில் ‘wipe cache partition' செய்தால் இந்த பிரச்சனை இருக்காது.

கேமரா பிரச்சனை

கேமரா பிரச்சனை

சிலருக்கு கேமரா ஓபன் ஆவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது, இதற்கு போனினை ரீஸ்டார்ட் செய்தால் போதுமானது, அப்படியும் பிரச்சனை சரியாகாத சமயத்தில் கேச்சிகளை க்ளியர் செய்து பார்க்கலாம்.

மற்ற செயலிகளில் பிரச்சனை

மற்ற செயலிகளில் பிரச்சனை

முதலில் பிரச்சனை செய்யும் செயலியை ரீஸ்டார்ட் செய்யலாம், பிரச்சனை சரியாகாத சமயத்தில் போனையே ரீஸ்டார்ட் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Common Problems with the Samsung Galaxy S5 Lollipop. Here you will find some Common Problems with the Samsung Galaxy S5 Lollipop and easy steps to fix them.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X