டிப்ஸ் : ஆண்ராய்டு போன்களை வேகமாக சார்ஜ் செய்வது எப்படி..?!
உங்கள் ஸ்மார்ட்போன் முழுமையாக சார்ஜ் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா என்ன..? கவலையை விடுங்கள், அதை சரி செய்ய 'டிப்ஸ்' ரெடியாக உள்ளது.
ஸ்மார்ட்போன் காலத்தில் பேட்டரி என்பது எவ்வளவு சிக்கலான விடயம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சில புத்திசாலித்தனமான மற்றும் எளிமையான டிப்ஸ்களை பின்பற்றினால் போதும்அதை சீராக்கி விடலாம். முக்கியமாக, உங்கள் ஆண்ராய்டு ஸ்மார்ட்போன்கள் சார்ஜ் ஆகுவதற்கு ஏன் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது என்பதை புரிந்து கொள்ளுதல் அவசியம்..!

01. ஆப்ஸ் :
ஆப்ஸ்களின் இயக்கம் சார்ஜ் செய்யும் நேரத்தை அதிகரிக்கும். ஆகையால், சார்ஜ் செய்யும் போது எந்த விதமான ஆப்ஸ்களும் இயங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்..!

02. சார்ஜர் :
விலை குறைந்த லோக்கல் சார்ஜர்கள் மிகவும் பொறுமையாகத்தான் சார்ஜ் ஆகும். ஆகையால் அதையும் தவிர்த்திடுங்கள்.

03. லாப்டாப் :
லாப்டாப்பின் பேட்டரி பேக்-அப் மூலம் சார்ஜ் செய்தால் பொறுமையாகத்தான் சார்ஜ் ஆகும். ஆகையால் அதை தவிர்க்க வேண்டும்.

04. ப்ளக் மற்றும் வயர் :
சில சமயம் எல்லாமே சரியாக இருக்கும் ஆனாலும் சார்ஜ் ஆகாது, அந்த நேரத்தில் ப்ளக் மற்றும் வயர் கனெக்ஷன்களை சரி பார்க்க தவறக்கூடாது.

05. போன் பேட்டரி :
மிகவும் மெதுவாக சார்ஜ் ஆகின்றது என்றால் உங்கள் போன் பேட்டரியின் வாழ்நாள் முடிந்து விட்டது என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.

06. ஸ்மார்ட்போன் :
சந்தையில் கிடைக்கும் எல்லா வகையான ஸ்மார்ட்போன்களும் ஒரே போன்ற தரம் கொண்டதாய் இருக்காது. ஆக, உங்கள் போன் மிகவும் சார்ஜ் ஆக காரணம் உங்கள் ஸ்மார்ட்போனின் தரம் கூட ஒரு காரணம் தான்.

07. ப்ளீஸ் கொஞ்சம் தூரம் :
இதை முக்கியமாக பின்பற்ற வேண்டும். சார்ஜ் ஆகும் போது போனினை பயன்படுத்தவே கூடாது.

மேலும் பல டிப்ஸ் செய்திகளை படிக்க :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications