ஸ்மார்ட்போன் பேட்டரியை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி

By Meganathan
|

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரும் இன்று சந்திக்கும் ஒகு முக்கிய பிரச்சனையாக இருப்பது, பேட்டரி பேக்கப் தான். ஒரு காலத்தில் பல நாட்களுக்கு சார்ஜ் செய்யாமல் இருந்தாலும் பேட்டரி பேக்கப் குறித்து பவலை கொள்ளாமல் இருந்ததையும் மறந்துவிட முடியாது.

இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் கையில் சார்ஜர் அல்லது மைக்ரோ யுஎஸ்பி கேபிள் ஆகியவற்றை கையில் எடுத்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நிலை தான் நிலவுகின்றது. இங்கு உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி என்று தான் பார்க்க இருக்கின்றீர்கள், இவைகளை பின்பற்றினால் பேட்டரி அதிக நேரம் நீடிக்கும் என்பதை விட நாள் முழுவதுமாவது இருக்கும் எனலாம்.

லொகேஷன் செட்டிங்ஸ்

லொகேஷன் செட்டிங்ஸ்

ஸ்மார்ட்போனில் லொகேஷன் செட்டிங்ஸ் ஆன் செய்யப்பட்டிருந்தால் அதிகளவு பேட்டரி பயன்படுத்தப்படும் அதனால் போனின் செட்டிங்ஸ் மெனு சென்று லொகேஷன் செட்டிங்ஸை ஆஃப் செய்யலாம்.

ப்ரைட்னஸ்

ப்ரைட்னஸ்

போனின் ப்ரைட்னஸ் அதிகமாக இருந்தால் அதிகளவு பேட்டரி செலவாகும், முடிந்த வரை போனின் ப்ரைட்னஸை குறைவாக வைப்பது நல்ல பலனை தரலாம்.

செயலி

செயலி

பயன்படுத்தாத செயலிகளை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்க வேண்டும்.

டேட்டா

டேட்டா

செட்டிங்ஸ் மெனுவில் அதிக பேட்டரி மற்றும் டேட்டாவை பயன்படுத்தும் செயலிகள் யாவை என்பதை அறிந்து கொள்ள வேண்டும், பேட்டரி தேவைப்படும் சமயத்தில் அவைகளை மட்டும் ஸ்விட்ச் ஆஃப் செய்தால் கொஞ்ச நேரத்திற்கு பேட்டரி கிடைக்கும்.

 வைபை

வைபை

முடிந்த வரை டேட்டா பயன்படுத்த வைபை சேவையே சிறந்தது, இவை குறைந்த அளவு பேட்டரியை மட்டுமே பயன்படுத்தும்.

2ஜி

2ஜி

இன்டெர்னட் பயன்படுத்தாமல் போனை குறுந்தகவல் மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள மட்டும் பயன்படுத்தும் போது 2ஜி சேவையை தேர்ந்தெடுப்பது நல்ல பலனை தரும். இதை செயல்படுத்த மொபைலின் நெட்வர்க் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்.

குவால்காம்

குவால்காம்

ஒருவேலை குவால்காம் பிராசஸர் மூலம் இயங்கும் போனை பயன்படுத்தினால் குவால்காம் பேட்டரி குரு செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள், இந்த செயலி போனின் பயன்பாட்டிற்கு ஏற்றவாரு பேட்டரி பயன்பாட்டை குறைக்கும்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

போனின் டிஸ்ப்ளேவை 15 நொடிகளுக்கு பின் ஸ்லீப் மோடிற்கு செல்லும் படி பார்த்து கொள்ளுங்கள். இதுவும் அதிகளவு பேட்டரியை சேமிக்கும்.

போன்

போன்

அதிக சிறப்பம்சங்கள் இருக்கும் உயர் ரக போன்களை பயன்படுத்தும் போது அவைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் இன்பில்ட் மென்பொருள்களின் மூலம் பேட்டரியை சேமிக்கலாம்.

Best Mobiles in India

English summary
Better battery life out of your smartphone. Battery life is perhaps the biggest issue a modern smartphone user faces. Gone are the days where you could go without charging your phone for days at a stretch.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X