சீனாவில் கழிவறை குழாயில் குழந்தை!!

By Keerthi
|

சீனாவில் கழிவறை குழாயில் இருந்து குழந்தை ஒன்று மீட்டு எடுக்கப்பட்ட காட்சி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

சீனாவில் தகாத உறவின் மூலம் பிறக்கும் குழந்தை மற்றும் பெண் குழந்தைகளை பெற்ற தாயே நிராகரித்து கைவிடும் மனப்பாங்கு பெருகி வருகிறது.

இவ்வகையில், வேண்டாத குழந்தைகளாக கருதப்படும் சிசுக்களை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிவதும், சாக்கடைகளில் வீசிக் கொல்வதும் வாடிக்கையாகி விட்டது.

சீன அரசின் 'குடும்பத்திற்கு 2 குழந்தைகள் போதும்' என்ற கட்டுப்பாடும் சிசுக் கொலைகளுக்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

அவ்வகையில், ஜின்ஹுவா மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியின் கழிவறை குழாயில் சிக்கியிருந்த ஆண் சிசுவை மீட்புப்படையினர் நேற்று காப்பாற்றியுள்ளனர்.

கழிவறை குழாயின் காற்று போக்கி வழியாக நேற்றிரவு குழந்தையின் அழுகுரல் சத்தத்தை கேட்ட சிலர் உடனடியாக போலீசாருக்கும் மீட்புப்படையினருக்கும் தகவல் அளித்தனர்.

கழிவுநீர் பிளாஸ்டிக் பைப்பை அப்படியே வெட்டி எடுத்த மீட்புப்படையினர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.

அங்கு பைப்பை 'ஸ்கேன்' செய்து பார்த்த டாக்டர்கள் குழந்தையின் இருப்பிடத்தை கண்டுபிடித்து சாதுர்யமான முறையில் குழாயை வெட்டி எடுத்து குழந்தையை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

தீவிர அவசர சிகிச்சைக்கு பின்னர் குழந்தை நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பிறந்து சற்று நேரமே ஆன அந்த சிசு, கழிவறையிலேயே பிறந்திருக்கலாம். அல்லது, பிறந்த சிசுவை கழிவறை பீங்கானுக்குள் திணித்து பெற்ற தாயே கொல்ல முயற்சித்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த சீன மூதாட்டி ஒருவர், 'கழிவறை கால்வாயின் அசுத்தத்தை விட இந்த சிசுவை கொல்லத் துணிந்த தாயின் மனம் மிகவும் அசுத்தம் நிறைந்ததாக இருந்திருக்கும்' என்று வேதனையுடன் கூறினார்.

இந்த செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது கீழே கழிவறையில் இருந்து மீட்க்ப்பட்ட குழந்தயை படத்தில் காணலாம்.....

Click Here For New Smartphones Gallery

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

கழிவறை குழாயில் குழந்தை

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X