Home
How to

மது குடிக்கும் அளவை கணக்கிடும் புதிய வாட்ச்!

By Keerthi

நீங்கள் குடித்துவிட்டு போலீசை ஏமாற்றி செல்லலாம், ஆனால் இதை உங்களால் எப்போதும் ஏமாற்ற முடியாது.

பொதுவாக குடிபோதையில் வாகனத்தை ஓட்டிச்செல்வது பேராபத்தை ஏற்படுத்தும். அதை தடுக்க போலீசார் ப்ரீத் அனலைசர் என்னும் கருவியை கொண்டுதான் கார் டிரைவர்கள் குடி போதையில் இருக்கிறார்களா? என சோதனை போட்டு அபராதம் விதிக்கிறார்கள்.

இந்த ப்ரீத் அனலைசர் கருவி மூலம் மது அருந்தியவரை துல்லியமாக கண்டிபிடிக்க முடியுமா? பொதுவாக மது அருந்தியவரின் ரத்த ஓட்டத்தில் ஆல்கஹால் இலகுவாக கலந்துவிடுகிறது.

ரத்த ஓட்டத்தில் கலந்த ஆல்கஹால் நுரையீரலில் இருக்கும் ஆல்வியோலை என்ற நுண் துவாரங்கள் வழியாக ஆவியாகி கரியமில வாயுவுடன் சேர்ந்து சுவாசம் மூலம் வெளியேறும்.

இதுபோன்று சுவாசத்தில் ஆவியாக வெளியேறும் ஆல்கஹால் அளவை வைத்தே ஒருவர் எவ்வளவு குடித்துள்ளார் என்பதை மிகத் துல்லியமாக கணக்கிட்டு கூறிவிடுகிறது ப்ரீத் அனலைசர் கருவி.

அதே சமயம், போதிய அளவு காற்றை ஊதினால்தான் இந்த கருவி துல்லியமாக கணக்கிடும். இதில், சிலர் குறைந்த அளவு காற்றை ஊதிவிட்டு தப்பிக்க வழியுண்டு.

இந்நிலையில் இது போன்ற அனலைசரை விடுத்து நாமே கட்டுப்பாட்டுடன் இருந்து கொண்டால் மிகவும் நல்லதாக இருக்கும் அல்லவா? இதற்காக ஜப்பான் நாட்டை சேர்ந்த டோக்கியோபிளாஷ் என்ற நிறுவனம் ஒரு பிரத்தியேக கைக்கெடிகாரத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த கைக்கெடிகாரத்தின் கீழ் பகுதியில் நாம் கொஞ்சம் மூச்சு விட்டால் போதும். அதன் திரையின் வலது பக்கத்தில் ரத்தத்தில் ஆல்கஹாலின் தன்மை குறித்த 10 விதமான வித்தியாச நிலைகளை காட்டும். பச்சை, மஞ்சள், சிவப்பு என்ற ஒளியின் மூலம் எச்சரிக்கை செய்கிறது.

பச்சை நிறம் தோன்றினால் மிதமான நிலை. மஞ்சள் நிறம் சற்று கூடுதல். சிவப்பு நிறம் நாம் அளவுக்கு மீறிய போதையில் இருக்கிறோம் என்பதை விளக்குவதாகும். இந்த கைக்கெடிகாரத்தின் விலை 65 பவுண்ட் (சுமார் ரூ.5,200) ஆகும்.

எவ்வளோ இருந்தா என்னப்பா கண்டிப்பா இதை வாங்கறோம்.

இதோ அதன் வீடியோ....

<center><center><iframe width="600" height="360" src="http://www.youtube.com/embed/jTKqyIIfiFo?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center></center>

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X