மொபைல் போனை பாதுகாப்பாக வைத்து கொள்வது எப்படி

By Meganathan
|

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சமயத்தில் அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றன. ஸ்மார்டோபோன் மூலம் கால் செய்வது, இன்டர்நெட் பயன்படுத்துவது, சமூக வலைதளம், பொருட்களை வாங்குவது என அனைத்திற்கும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம்.

[மொபைல் போன் அ முதல் ஃ வரை, ஒரு பார்வை]

சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒருவர் சைபர் க்ரைம் மூலம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஸ்லைடர்களில் மொபைல் போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பதை பாருங்கள்..

ப்ரவுஸிங்

ப்ரவுஸிங்

இன்ட்ர்நெட் பயன்படுத்தும் ப்ரவுஸர் லின்க்களில் http க்கு பதிலாக https என்று இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இன்டர்நெட் பாதுகாப்பு அதிகமாக இருக்கின்றது எனலாம்.

பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு

இன்று பலரும் தங்களது போன்களில் பாஸ்வேர்டு வைத்திருக்கின்றனர். முடிந்த வரை கடினமான பாஸ்வேர்டு வைத்திருத்தல் நல்லது.

செயலி

செயலி

போனில் Find My iPhone போன்ற செயலிகளை இன்ஸ்டால் செய்ய வேண்டும், திடீரென போன் தொலைந்து போனால் அதனை எளிதாக கண்டறிய இந்த செயலி உதவியாக இருக்கும்.

கனெக்ஷன்

கனெக்ஷன்

சில ஸ்மார்ட்போன்களில் வைபை மற்றும் ப்ளூடூத்களில் தானாக கனெக்ட் ஆகும் ஆப்ஷன் இருக்கும், அதனை டிஸ் ஏபிள் செய்தல் பல விதங்களில் உங்களது தகவல்களை காக்கும்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

பலரும் சமூக வலைதளங்களில் ஊழல் செய்ய காத்திருக்கின்றனர், உங்களுக்கு அறிமுகம் இல்லாது எவரது அழைப்புகளையும் சமூக வலைதளங்களில் ஏற்காமல் இருப்பது நல்லது.

ஷாப்பிங்

ஷாப்பிங்

மொபைல் மூலம் ஷாப்பிங் செய்யும் போது நன்கு அறிமுகமான தளங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும், இணையத்தில் எக்கச்சக்கமான போலி தளங்கள் இருக்கின்றன.

 ப்ரைவஸி செட்டிங்ஸ்

ப்ரைவஸி செட்டிங்ஸ்

சில செயளிகள் உங்களது தனிப்பட்ட விஷயங்களையும் கேட்கும், குறிப்பாக இருப்பிடம் மற்றும் பாஸ்வேர்டுகள். இது போன்ற செயலிகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

மின்னஞ்சல்

மின்னஞ்சல்

ஆன்லைன் மூலம் பல பொருட்களை வாங்கும் போது மின்னஞ்சல் மூலம் சில போலி முகவர்கள் உங்களை ஏமாற்ற முயற்சி செய்யலாம், இது போன்று வரும் ஒவ்வொரு மின்னஞ்சல்களையும் தெளிவாக கையாள வேண்டும்.

வைபை

வைபை

பொது இடங்களில் வைபை பயன்படுத்தும் போது அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், பலரும் உங்களது தகவல்களை திருட முயற்சி செய்வது வைபை மூலம் தான்.

 பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு

சிலர் ஒரே பாஸ்வேர்டை பல சேவைகளுக்கும் பயன்படுத்துவர், முடிந்த இதனை தவிர்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
10 Ways to Keep Your Phone Safe. Check out here some simple and best Ways to Keep Your Phone Safe.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X