பழைய ஆண்ட்ராய்டு ஸ்மர்ட்போன் பயன்படுத்தப்படாமல் உள்ளதா, அப்படியானால் இது உங்களுக்கானது தான்
ஓல்டு இஸ் கோல்டு என ஆங்கிலத்தில் பழமொழி இருக்கின்றது, பழையது என்றாவது உதவும் என்பதே இதன் பொருள், இதை விளக்கும் பல கதைகளை நீங்கள் கடந்திருப்பீர்கள். சில பொருட்கள் பயன்படாத என ஒதுக்கி வைத்திருப்பீர்கள், அந்த வகையில் உங்களது ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனும் இருக்கின்றதா, அப்படியானால் அதை எப்படி மீண்டும் பயன்படுத்துவது என்பதை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள்.
பயன்படுத்தப்படாமல் இருக்கும் உங்களது பழைய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை இப்படியும் பயன்படுத்த முடியும். எப்படி பயன்படுத்துவது என்று நீங்களே பாருங்கள்...

அலாரம்
இன்றும் பலர் அலாரம் கொண்ட கடிகாரங்களை வாங்குவதுண்டு, உங்களது பழைய ஆன்டிராய்டு ஜெல்லி பீன் ஸ்மார்ட்போனில் டேட்ரீம் என்ற அம்சம் உங்களது அலாரம் தேவையை பூர்த்தி செய்கின்றது.
எம்பி3 ப்ளேயர்
அதிகமாக பாட்டு கேட்பீர்களா அப்படியானால் உங்களது பழைய ஸ்மார்ட்போனை பாட்டு கேட்பதற்கு மட்டும் பயன்படுத்தலாம்.
பாதுகாப்பு திரை
இதன் மூலம் உங்களது வீட்டில் இருக்கும் பாதுகாப்பு கேமாரவிற்கு திரையாக உங்களது பழைய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை பயன்படுபத்தி கொள்ளலாம்
புதிய அம்சங்கள்
உங்கள் புதிய ஸ்மார்ட்போனில் சில அம்சங்களை முயற்சி செய்தால் அதற்கான வாரண்டி முடிந்துவிடும். இதனால் புதிய அம்சங்களை இன்ஸ்டால் செய்ய உங்களுக்கு தயக்கமாக இருக்கும்.
இந்த நேரத்தில் புதிய அம்சங்களை முயற்சி செய்ய உங்கள் பழைய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம்.
கேமரா கருவி
உங்களில் சிலர் புகைப்படம் எடுக்க அதிக ஆர்வம் கொண்டவராகவும் இருக்கலாம், அப்படி இருக்கும் பட்சத்தில் உங்கள் கேமராவின் செயளியை பழைய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கேமராவை எங்கிருந்தும் இயக்க முடியும்.
குக்புக்
சமையலில் சந்தேகம் ஏற்பட்டால் இணையத்தில் கிடைக்கம் சமையல் குற்ப்பு சார்ந்த புத்தகங்களை உங்களது பழைய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம்.
டிஜிட்டல் போட்டோ ப்ரேம்
வைபை மூலம் இணைக்கப்பட்ட டிஜிட்டல் போட்டோ ப்ரேம்கள் இருக்கின்றன, ஆனால் அவைகளுக்கு நீங்கள் பணம் செலுத்த தேவையில்லை. உங்களது பழைய ஆன்டிராய்டு டேப்ளெட் மற்றும் டாக் உங்களுக்கு பிடித்தமான புகைப்படங்களை பார்க்க முடியும்.
எமுலேட்டர் கன்சோல்
உங்கள் புதிய ஸ்மார்ட்போனில் புதிய கேம்களை விளையாட முடியவில்லையா, அப்படியானால் சந்தையில் கிடைக்கும் எமுலேட்டர் மூலம் உங்களது பழைய ஸ்மார்டபோனில் உங்களுக்கு பிடித்தமான கேம்களை விளையாடலாம்.
ஈ-ரீடர்
சந்தையில் கிடைக்கும் ஈ-ரீடர் வகைகளை வாங்குவதற்கு பதிலாக, உங்களின் பழைய ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளெட்களை புத்தகங்கள் வாசிக்க பயன்படுத்தலாம்.
மேலும் பல ஆப்ஷன்கள்
உங்களது பழைய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளெட்களை மேற்சொன்னதை விட அதிகமாக பயன்படுத்த முடியும். பழைய பொருட்கள் என்றாவது யாருக்காவது பயன்படும். அந்த வகையில் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனின் பயன்பாடு இன்னும் அதிகமாகவே இருக்கின்றது.


Click it and Unblock the Notifications