ஃபேஸ்புக்கை எதிர்க்கும் 81% இந்தியர்கள்.!!

By Meganathan
|

இந்தியா முழுவதும் இலவசமாக சமமான இண்டர்நெட் வழங்குவதாக தெரிவித்து ஃபேஸ்புக் நிறுவனம் துவங்கிய திட்டம் தான் நெட் நியூட்ராலிட்டி ஆகும். இந்தியாவில் போதுமான வரவேற்பு கிடைக்காததை தொடர்ந்து அந்நிறுவனம் அதே திட்டத்தை பெயர் மாற்றி ஃப்ரீ பேசிக்ஸ் என்ற பெயரில் தற்சமயம் விளம்பரம் செய்து வருகின்றது.

நெட் நியூட்ராலிட்டி, ஃப்ரீ பேசிக்ஸ், தடையில்லா இண்டர்நெட் : யாரை நம்ப வேண்டும், எது உண்மை, எது மக்களுக்கு பயன் தரும், மக்கள் இது குறித்து என்ன சொல்கின்றார்கள் என்பனவற்றை ஸ்லைடர்களில் பாருங்கள்.

ஃப்ரீ பேசிக்ஸ்

ஃப்ரீ பேசிக்ஸ்

நெட் நியூட்ராலிட்டி மற்றும் ஃப்ரீ பேசிக்ஸ் என்ற திட்டமானது இந்தியாவில் 100 கோடி மக்களை இலவசமாக இண்டர்நெட் மூலம் இணைக்க வழி செய்யும் என கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இந்த திட்டத்தை செயல்படுத்த ஃபேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிறுவனங்கள்

நிறுவனங்கள்

ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தை விரிவுப்படுத்த ரிலையன்ஸ் போன்றே இந்தியா முழுவதும் இயங்கி வரும் இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைகள் மற்றும் இணையதளங்களை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சேவை

சேவை

முன்பு 33 இணையதளங்கள் குஜராத், மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ் நாடு, கேரளா மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களில் இந்த திட்டத்தின் மூலம் துவங்கப்பட்ட நிலையில் இன்று மொத்தம் 80 இணையதளங்களை இந்த திட்டத்தின் மூலம் இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

நிலவரம்

நிலவரம்

உண்மையில் ஃப்ரீ பேசிக்ஸ் என்பது எவ்வித தடையும் இல்லாமல் அனைவருக்கும் சமமமான இணைய சேவை வழங்க வேண்டும் என்பதாகும் ஆனால் ஃபேஸ்புக் அறிவித்திருக்கும் திட்டமானது தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைகளுக்கு மட்டும் இலவச இண்டர்நெட் வழங்கும் என்பதால் பயனர்கள் சுதந்திரமான இண்டர்நெட் பயன்படுத்த முடியாது.

டிராய்

டிராய்

இந்தியாவில் இன்னும் முறையான அனுமதி பெறப்படாத இந்த திட்டத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவித்தால் தொடர முடியும் என்ற சூழல் என இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் ( டிராய் ) உத்தரவிட்டிருக்கின்றது. இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் மக்கள் ஆதரவை கேட்டு இணையதளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றது.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

இந்தியாவில் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்து 130 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளிகளில், 3.2 மில்லியன் பேர் வாக்களித்திருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ஆதரவளிக்க வாடிக்கையாளர்கள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிறுவனங்கள்

நிறுவனங்கள்

ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தை கைவிட ரிலையன்ஸ் நிறுவனத்தை டிராய் கேட்டு கொண்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விருப்பம்

விருப்பம்

ஆனால் இந்தியாவில் சுமார் 81% பேர் ஃப்ரீ பேசிக்ஸ் மற்றும் இது போன்ற மற்ற சேவைகளுக்கு எதிராக வாக்களித்திருப்பதாக லோக்கல்சர்க்கில்ஸ் தெரிவித்துள்ளது. இது ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிரான தீர்ப்பாகவே அனைவராலும் பார்க்கப்படுகின்றது.

ஆய்வு

ஆய்வு

இந்த திட்டம் குறித்து சுமார் 30,000 இந்தியர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. லோக்கல்சர்க்கில்ஸ் நடத்திய இந்த ஆய்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அரசு

அரசு

ஆய்வில் பங்கேற்ற குடிமக்கள் மக்களுக்கு பயனுள்ள இணைய சேவைகள் அனைத்தையம் அரசாங்கமே இலவசமாக வழங்க வேண்டும் என வாக்களித்துள்ளனர். ஒட்டு மொத்தமாக இந்தியர்கள் அனைவரும் சுதந்திரமான தடையில்லா இண்டர்நெட் சேவையை பயன்படுத்த வேண்டும் என்றே 81% பேர் வாக்களித்திருக்கின்றனர்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Majority Indians vote against Facebook's Free Basics. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X