வேர்ல்ட் ஆப் வார்ஷிப்ஸ் கேம் - இந்தியாவிற்கென பிரத்யேக தொகுப்பை அறிவித்த ஜோடாக்!

|

பிரபல மல்டிபிளேயர் ஆன்லைன் ஆக்சன் கேமான "வேர்ல்ட் ஆப் வார்ஷிப்ஸ்"-க்கு (WoWS) முதல்முறையாக இந்தியாவிற்கென் பிரத்தியேக தொகுப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்படுவதை ஜோடாக்( ZOTAC) அறிவித்துள்ளது. வார்கேமிங்கில் மிகவும் பிரபலமான கடற்படை-போர் கருப்பொருள் கொண்ட MMO கேமிற்கான பிரத்யேக இந்தியா தொகுப்பு சமீபத்தில் ஜோடாக் கேமிங் பிரிவின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொகுப்பின் இந்திய கேமர்கள் ஜோடாக்-ன் தொடக்க நிலை ஜி.பீ.யுகளில் மல்டிபிளேயர் கேமை விளையாட முடியும்.

ஜோடாக் கேமிங்

ஜோடாக் கேமிங்

ஜோடாக் கேமிங் தகவலின் படி, கேமர்களை மையமாகக் கொண்ட இந்த இயக்கம், ஜோடாக் போர்ட்ஃபோலியோவிலிருந்து என்விடியா ஜி.பீ.யுகள் இடம்பெறும் நம்பமுடியாத மதிப்புமிக்க தொகுப்பை அணுகும் வாய்ப்பை வேர்ல்ட் ஆப் வார்ஷிப்ஸ் தளத்தின் இந்திய கேமர்களுக்கு வழங்கும். ரீடைல் மற்றும் ஈ-காமர்ஸ் சேனல்களில் ஜிடி மற்றும் ஜிடிஎக்ஸ் வரம்புள்ள ஜோடாக் கேமிங் ஜி.பீ.யுகளின் அனைத்து புதிய கொள்முதல் மூலம் இந்த சிறப்பு இந்திய தொகுப்பு கிடைக்கும்.

இதன் பலன்களை பெறுவது எப்படி?

கேமர்கள் www.warships.in தளத்தில் பிரத்யேக இந்திய தொகுப்பில் புதிய கணக்கிற்கு பதிவுசெய்ய வேண்டும். பதிவுசெய்யும் முறைகளை முடித்த பின், ரூ .2250 வரையிலான பல WoWs நன்மைகளை பெற பயன்படுத்தக்கூடிய குறியீட்டை பெறுவீர்கள். மேலும் நீங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் பதிவுசெய்ததும், ஜோடாக் இன் விரிவான ஐந்தாண்டு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தினை இந்த தொகுப்பு வழங்கும்.

வேர்ல்ட் ஆப் வார்ஷிப்ஸ் வர்கேமிங் வெளியீட்டாளருடன் இணைந்து இந்திய கேமர்களுக்கான பிரத்தியேக இந்திய தொகுப்பை ஜோடாக் கேமிங் வெளியிட்டது இதுவே முதல் முறையாகும். இந்த பிரத்யேக சலுகையின் ஒரு பகுதியாக வர்கேமிங்-ன் நேவல் வார்பேர் கருப்பொருள் கொண்ட MMO கேமை, இந் நிறுவனத்தின் ஜிடி 730, ஜிடி 1030 மற்றும் ஜிடிஎக்ஸ் 1050 டிஐ ஜிபியுகளில் அனுபவிக்க முடியும்.

BSNL மற்றும் PAYTM கூட்டணி வைத்தது இதற்கு தானா? புதிய புரட்சிக்கு சபாஷ்!BSNL மற்றும் PAYTM கூட்டணி வைத்தது இதற்கு தானா? புதிய புரட்சிக்கு சபாஷ்!

பிரபலமான கடற்படை-போர்

பிரபலமான கடற்படை-போர்

இந்திய பிரத்யேக தொகுப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர்கேமிங்கின் இந்தியா WoWS மறுதொடக்கத்தின் போது வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் சமீபத்தில் யுத்தத்தை அடிப்படையாக பிரபல கேமான எம்.எம்.ஓ-ஐ அடிப்படையாக கொண்ட இந்திய உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்தியது. மேலும் உள்ளடக்க வெளியீட்டுடன், அந்நிறுவனம் இந்திய கேமிங் துறையில் முன்னணி நிறுவனங்களான ஜோடாக், ஆக்ட் ஃபைபர்நெட், ஏஎன்டி எஸ்போர்ட்ஸ் மற்றும் எல்ஜி உள்ளிட்ட நிறுவனங்களுடன் கூட்டணியையும் அறிவித்தது.


பிரபலமான கடற்படை-போர் கருப்பொருள் கொண்ட MMO வார்கேம், அதன் தளத்தில் 30 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட கேமர்களை சேர்த்ததுள்ளது. இந்த வகையின் மிக வெற்றிகரமான விளையாட்டுகளில் இது ஒன்றாகும். துவக்க நிலை ஜோடாக் ஜிபியூ-களில் மல்டிபிளேயர் கேமை அனுபவிக்க முடியும் மற்றும் உயர் கிராஃபிக் அமைப்புகளில் 1080p என்ற அளவில் இந்த கேமை விளையாட முடியும்.

#1

#1

ஜோடாக் கேமிங் WoWS தொகுப்புகள்

* ரூ1,000 தொகுப்பு - ஜிபியூ : ஜிடி 730,1030

கப்பல்கள் : அரோரா, கேம்பில்டவுன்

கப்பல் கேப்டன்கள் : 2×10 புள்ளிகள்

பீரிமியம் டப்லூன் :600

இன்-கேம் கிரிடிட்: 10,00,000

போர்ட் ஸ்லாட்டுகள்: மொத்தம் 5

காமோ: 25 × ப்ரிலியண்ட் ரே

ப்ளேக்ஸ்: 25x எகானமி கொடிகள்

WoWS பிரீமியம் கணக்கு: 7 நாட்கள்

ஜியோ பைபர் இணைப்பில் இலவசம்: மீண்டும் தெறிக்கவிட்ட அம்பானி.!ஜியோ பைபர் இணைப்பில் இலவசம்: மீண்டும் தெறிக்கவிட்ட அம்பானி.!

#2

#2

* ரூ1,700 தொகுப்பு - ஜிபியூ : ஜிடிஎக்ஸ் 1050டிஐ , ஜிடிஎக்ஸ் 1650

கப்பல்கள் : யூபாரி, கோனிங் ஆல்ப்ர்ட், கேம்பில்டவுன்

கப்பல் கேப்டன்கள் : 3×10 புள்ளிகள்

பீரிமியம் டப்லூன் :1500

இன்-கேம் கிரிடிட்: 15,00,000

போர்ட் ஸ்லாட்டுகள்: மொத்தம் 6

காமோ: 40 × ப்ரிலியண்ட் ரே

ப்ளேக்ஸ்: 40x எகானமி கொடிகள்

WoWS பிரீமியம் கணக்கு: 30 நாட்கள்

#3

#3

* ரூ2250 தொகுப்பு - ஜிபியூ : ஜிடிஎக்ஸ் 1660டிஐ , ஜிடிஎக்ஸ் 1660

கப்பல்கள் : யூபாரி, கோனிங் ஆல்ப்ர்ட், மார்பிள்ஹெட்

கப்பல் கேப்டன்கள் : 3×10 புள்ளிகள்

பீரிமியம் டப்லூன் :2400

இன்-கேம் கிரிடிட்: 25,00,000

போர்ட் ஸ்லாட்டுகள்: மொத்தம் 6

காமோ: 80 × ப்ரிலியண்ட் ரே

ப்ளேக்ஸ்: 80x எகானமி கொடிகள்

WoWS பிரீமியம் கணக்கு: 30 நாட்கள்

Best Mobiles in India

English summary
ZOTAC GAMING Announces India-only Bundle For Iconic World of Warships Online Action Game: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X