இனி இன்ஸ்டால் செய்யாமலேயே ஆண்ட்ராய்டு கேம்களை விளையாடலாம்; கூகுள் அசத்தல்.!
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, கடந்த ஆண்டு வீடியோ கேம்களை இன்ஸ்டால் செய்த ஆண்ட்ராய்டு பயனர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகும்.!
உலகம் முழுவதும் உள்ள கேம் பிரியர்கள், புதிய கேம்களை கண்டறிய கோவூகுள் பிளே ஸ்டோருக்கு வருகை தருகிறார்கள். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, கடந்த ஆண்டு வீடியோ கேம்களை இன்ஸ்டால் செய்த ஆண்ட்ராய்டு பயனர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகும்.

அதை மென்மேலும் ஊக்குவிக்கும் முனைப்பின்கீழ், பயனர்கள் அவர்களுக்கு பிடித்த புதிய கேம்களைக் கண்டறிய உதவுவதற்கு அல்லது விரும்பியவற்றைப் பெறுவதற்கும், கூகுள் நிறுவனம் அதன் கூகுள் பிளே பயன்பாட்டை மறுவடிவமைத்துள்ளது. இந்த மருவடிவமைப்பில் புதிய "ஆர்கேட்" டேப் இடம்பெற்றுள்ளது. அதில் கேம்களுக்கான வீடியோ டிரெய்லர்கள் அல்லது குறிப்பிட்ட வகை கேம்களை கண்டுபிடிக்க உதவும் (எடுத்துக்காட்டிற்கு நியூ அல்லது ஆக்ஷன் மற்றும் பல) குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்.

இந்த தேடுபொறி அம்சத்துடன் சேர்த்து, உங்களுடைய கேம் திறமைகளை அதிகரிக்கவும், உங்களையொரு கேம் மாஸ்டர் ஆக உருவாக்கவும், இனி கூகுள் பிளே பயன்பாட்டில் உங்களுக்கு பிடித்த கேம்களைப் பற்றிய செய்திகள் மற்றும் யூட்யூப் வீடியோக்களும் காட்சிப்படும்.

இன்னும் ஒருபடி மேல் சென்று, ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களுக்கான சரியான மற்றும் மிகவும் தேவையான புதிய பயன்பாடுகளையும், கேம்களையும் கண்டறிய உதவும் வண்ணம், கூகுள் அதன் கூகுள் பிளே இன்ஸ்டன்ட் விருப்பத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த விருப்பமானது நீங்கள் ஒரு கேம்தனை பதிவிறக்கம் செய்யாமலேயே விளையாடிப்பார்க்க அனுமதிக்கும்.

இந்த புதிய கூகுள் பிளே இன்ஸ்டன்ட் அனுபவமானது, கூகுள் பிளே ஸ்டோர், கூகுள் பிளே கேம்ஸ் பயன்பாட்டில் அல்லது விளையாட்டு இணைப்புகள் பகிரப்படும் இடங்களில் கிடைக்கும். நீங்கள் ட்ரையல் பார்த்த கேம் உங்களுக்கு பிடித்திருந்தால், வெறுமனே "இன்ஸ்டால் நொவ்" என்கிற விருப்பத்தை டாப் செய்வதின் மூலம் ங்கள் ஸ்மாட்ஃபோனில் குறிப்பிட்ட விளையாட்டை நிறுவலாம்.


Click it and Unblock the Notifications