அமோகமாக விற்பனையாகும் எக்ஸ்பாக்ஸ் 360 மற்றும் 3டிஎஸ்

Posted By: Karthikeyan
அமோகமாக விற்பனையாகும் எக்ஸ்பாக்ஸ் 360 மற்றும் 3டிஎஸ்

மைக்ரோசாப்டின் எக்ஸ்பாக்ஸ் 360 என்ற வீடியோ விளையாட்டு சாதமும் மற்றும் நிண்டின்டோவின் 3டிஎஸ் வீடியோ விளையாட்டு சாதனமும் அமெரிக்காவில் மிகவும் பிரபலமானவை. அதே நேரத்தில் இந்த இரண்டு சாதனங்களின் விற்பனையும் அமெரிக்காவில் அமோகமாக இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இதைப் பற்றி ஆய்வு செய்த எச்பிடி கரூப், நிண்டின்டோ தனது 3டிஎஸ் சாதனத்தின் விற்பனையின் மூலம் சந்தையில் 75 சதவீத பங்கை வைத்திருப்பதாகவும் அதே நேரத்தில் எக்ஸ்பாக்ஸ் 360 விற்பனையின் மூலம் மைக்ரோசாப்டின் பங்கு முதலிடத்தில் இருப்பதாகவும் அது தெரிவித்திருக்கிறது.

குறிப்பாக கடந்த 18 மாதங்களாக எக்ஸ்பாக்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. மற்றும் விளையாட்டுச் சாதனங்களின் விற்பனையில் 47 சதவீத பங்கைக் கொண்டிருக்கிறது என்று மைக்ரோசாப்ட் ப்ளாக் எடிட்டர் ஜெப் மெய்ஸ்னர் கூறுகிறார்.

கடந்த ஜூன் மாதம் மட்டும் 257,000 எக்ஸ்பாக்ஸ் சாதனம் விற்பனையாகி இருக்கின்றன. மொத்தம் 272 மில்லியன் எக்ஸ்பாக்ஸ் சாதனங்கள் விற்பனையாகி இருக்கின்றன என்ற தகவலும் வருகிறது.

இந்த எக்ஸ்பாக்ஸில் தலைசிறந்த முக்கிய விளையாட்டுகள் உள்ளன. குறிப்பாக டாம் க்ளான்சி கோஸ்ட் ரெக்கன், பியூச்சர் சோல்ஜர், லெகோ பேட்மேன் 2, டிசி சூப்பர் ஹீரோஸ், மேக்ஸ் பைனே 3 மற்றும் என்பிஎ 2கே 12 போன்ற விளையாட்டுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

அதுபோல் நிண்டின்டோவின் 3டிஎஸ் சாதனமும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. கடந்த ஜூன் மாதம் மட்டும் 155,000 3டிஎஸ் சாதனம் விற்பனையாகி இருக்கிறது. மேலும் இந்த சாதனத்தின் மொத்த விற்பனை 5 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கிறது.

இந்த 3டிஎஸ் சாதனமும் தனது ரசிகர்களைக் கவரும் வகையில் ஏராளமான விளையாட்டுகளை வைத்திருக்கிறது. அதுபோல் 3டி வசதியையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot