புதிய வீடியோ கேம் சாதனத்தை வெளியிடும் மைக்ரோசாப்ட்!

Posted By: Karthikeyan
 புதிய வீடியோ கேம் சாதனத்தை வெளியிடும் மைக்ரோசாப்ட்!

மைக்ரோசாப்டின் எக்ஸ்பாக் 360 என்ற கேமிங் சாதனம் மிக வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அதை மனதில் வைத்து இந்த வீடியோ கேம் சாதனத்தின் அடுத்த மேம்பட்ட சாதனமாக மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் லைட் என்ற ஒரு புதிய கேமிங் சாதனத்தை மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்யவிருப்பதாக பரவலான வதந்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.

இந்த புதிய கேமிங் சாதனம் ஏற்கனவே இருக்கும் எக்பாக்சின் அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும். ஆனால் சற்று வித்தியாசமாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்த எக்பாக்ஸ் லைட் எஆர்எம் தளத்தைக் கொண்டிருக்கும். அதுபோல் எக்ஸ்பாக்சில் உள்ள எல்லா அப்ளிகேசன்கள் மற்றும் கேம்களை சப்போர்ட் செய்யும். மேலும் மீடியா கன்டென்டுகள் மற்றும் மீடியா அப்ளிகேசன்களையும் இந்த புதிய கேமிங் சாதனம் சப்போர்ட் செய்யும்.

இந்த கேமிங் சாதனத்தில் இருக்கும் கினட்டிக் சென்சார் என்ற தொழில் நுட்பம் இந்த சாதனத்திற்கு நவீன தொழில் நுட்பங்களை வழங்கும். மேலும் இந்த புதிய கேமிங் சாதனம் பழைய எக்பாக்சை விட அடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எக்ஸ்பாக்ஸ் எலைட் என்ற கேமிங் சாதனம் வரும் 2013ன் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

மேலும் இந்த புதிய கேமிங் சாதனத்தின் விலையும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் ரூ.5000க்குள் இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் இப்போது இருக்கும் எக்ஸ்பாக்ஸ் 360 இன்னும் விற்பனையில் சாதனை படைத்து வருவதால் புதிய எக்ஸ்பாக் எலைட் வருவதற்கு கால தாமதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot