Home
Gaming

எக்ஸ்பாக்ஸில் ஹலோ 4 அட்டகாசம்!

By Karthikeyan

எக்ஸ்பாக்ஸில் ஹலோ 4 அட்டகாசம்!
மைக்ரோசாப்டின் எக்ஸ்பாக்ஸ் என்ற விளையாட்டு சாதனத்தை உலக அளவில் பலர் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலோர் அந்த சாதனத்திற்கு அடிமையாகவே இருக்கின்றனர் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த எக்ஸ்பாக் பல சூப்பரான விளையாட்டுகளை விளையாட்டு பிரியர்களுக்கு வழங்குகிறது.

அந்த வகையில் இப்போது மைக்ரோசாப்ட் தனது எக்ஸ்பாக்ஸில் மீண்டும் ஒரு புதிய விளையாட்டை களமிறக்க இருக்கிறது. ஹலோ 4 என்று அழைக்கப்படும் இந்த பிரபலமான விளையாட்டை களமிறக்குவதன் மூலம் எக்ஸ்பாக்ஸின் விற்பனையும் அமோகமாக இருக்கும். அதோடு எக்ஸ்பாக்ஸின் ரசிகர்களின் எண்ணிக்கையும் இன்னும் அதிகமாக பெருகும் என்று மைக்ரோசாப்ட் கணக்குப் போடுகிறது.

இந்த ஹலோ 4 விளையாட்டு உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு ஆகும். ஹலோ விளையாட்டின் ரசிகர்களைக் கவர்ந்திழுக்கவே மைக்ரோசாப்ட் தனது எக்ஸ்பாக்ஸில் இந்த ஹலோ 4 விளையாட்டை களமிறக்குகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் எக்ஸ்பாக்ஸ் ரசிகர்களும் மற்றும் ஹலோ 4 ரசிகர்களும் கண்டிப்பாக ஆனந்தக் கூத்தாடுவார்கள் என்பது முற்றிலும் உண்மை.

ஹலோ 4 விளையாட்டுடன் வரும் புதிய எக்ஸ்பாக்ஸ் வரும் நவம்பர் மாதத்தி்ல் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இதன் விலை ரூ.20,000மாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த புதிய எக்ஸ்பாக்ஸ் விளையாட்டு பிரியர்களை திருப்திபடுத்தும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X