அடிச்சான் பாரு Xbox.. இனி கேமிங் கன்சோல் எதுக்கு.. ரூ.6,499-க்கு பயர் டிவி ஸ்டிக் போதும்.. சும்மா விளையாடலாம்!
பிளேஸ்டேஷன் மட்டுமல்லாமல், எக்ஸ்பாக்ஸ் கன்சோல்களில் (Xbox Console) கிடைக்கும் கேம்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆனால், அந்த கன்சோல்களை வாங்க பல வருடங்களுக்கு பணத்தை சேமிக்க வேண்டும். ஆனால், இப்போது வெறும் ரூ.6,499 பட்ஜெட்டில் கிடைக்கும் பயர் டிவி ஸ்டிக் இருந்தால் போதும், கிளவுட்டில் எக்ஸ்பாக்ஸ் கேம்களை விளையாடி கொள்ளலாம். ஆனால், கேமிங் பாஸ் வாங்க வேண்டி இருக்கும். இதுகுறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
அமேசான் (Amazon) நிறுவனம் ஆனது எக்ஸ்பாக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து கிளவுட் கேமிங் ஸ்ட்ரீமிங்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அமேசான் பயர் டிவி ஸ்டிக் இருந்தால் போதும், கேமிங் கன்சோல் இல்லாமலேயே 100-க்கும் மேலான எக்ஸ்பாக்ஸ் கேமிங்களை இனிமேல் விளையாடி கொள்ளலாம். இது கிளவுட் கேமிங் போலவே கிடைக்கும். ஆனால், மலிவான வருகிறது.

ஹாலோ நைட்: சில்க்சாங் (Hollow Knight: Silksong), ராஜி: ஆன் ஏன்சியன்ட் எபிக் (Raji: An Ancient Epic), நின்ஜா கைடென் 4 (Ninja Gaiden 4) போன்ற கேம்களை விளையாட முடியும். மேலும், எக்ஸ்பாக்ஸ் கேமிங் பாஸ் (Xbox Game Pass) மூலமாக கிடைக்கும் ஒட்டுமொத்த கிளவுட் கேமிங்களையும் ஃபயர் ஸ்டிக் யூசர்கள் விளையாடி கொள்ளலாம்.
* ஃபயர் டிவி ஸ்டிக் / ஃபயர் டிவி கியூப்
* ப்ளூடூத் எனபில்ட் கன்ட்ரோலர்
* எக்ஸ்பாக்ஸ் கேமிங் பாஸ் சந்தா
அமேசான் நிறுவனத்தின் ஃபயர் டிவி ஸ்டிக் (Fire TV Stick) அல்லது ஃபயர் டிவி கியூப் (Fire TV Cube) டிவைஸ்களில் இந்த எக்ஸ்பாக்ஸ் கிளவுட் கேமிங் கிடைக்கும். ஆகவே, உங்களிடம் 2ஆவது ஜெனரேஷன் ஃபயர் டிவி ஸ்டிக் 4K (Fire TV Stick 4K) அல்லது ஃபயர் டிவி ஸ்டிக் 4K பிளஸ் (Fire TV Stick 4K Plus) இருக்க வேண்டும். 3ஆவது ஜெனரேஷன் ஃபயர் டிவி கியூப் (Fire TV Cube) இருக்கலாம்.
அடுத்து ப்ளூடூத் எனபில்ட் கன்ட்ரோலர் (Bluetooth-enabled Controller) இருக்க வேண்டும். இதையும் ஃபயர் டிவி ஸ்டிக் வாங்கும்போது வாங்கி கொள்ளாலாம். அதேபோல எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் கன்ட்ரோலர் (Xbox Wireless Controller), எக்ஸ்பாக்ஸ் அடாப்டிவ் கன்ட்ரோலர் (Xbox Adaptive Controller), டூயல்சென்ஸ் (DualSense) அல்லது டூயல்ஷாக் 4 (DualShock 4) ஆகியற்றுடனும் பயன்படுத்தலாம்.
இறுதியாக எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் சந்தா பெற வேண்டும். இந்த மூன்றும் உங்களிடம் இருந்தால், 4K ரெசொலூஷனில் எக்ஸ்பாக்ஸ் கேம்களை விளையாடி கொள்ளலாம். இந்த ஃபயர் ஸ்டிக் டிவைஸ் கிட்டத்தட்ட கேமிங் கன்சோல் போலவே வேலை செய்கிறது. ஆகவே, மலிவான விலைக்கு பெரிய ஸ்கிரீனில் கேம்களை விளையாட முடியும். கேமிங் பாஸ் வாங்குவது எப்படி?
அமேசான் ஃபயர் ஸ்டிக் டிவைஸ் மூலம் அமேசான் ஆப் ஸ்டோரில் (Amazon App Store) எக்ஸ்பாக்ஸ் ஆப் (Xbox App) டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அதை இன்ஸ்டால் செய்துவிட்டு, மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் (Microsoft Account) லாகின் செய்து கொள்ளுங்கள். இப்போது, கேம் பாஸ் அதில் கிடைக்கும். ரூ.499 விலையில் இருந்து கேம் பாஸ் கொடுக்கப்படுகிறது.
இந்த கேம் பாஸில் விலைக்கு ஏற்ப கேம்கள் கொடுக்கப்படும். இதை கேம் பாஸ் லைபரி (Game Pass Library) மூலம் பார்த்து கொள்ளலாம். இன்டர்நெட் கனெக்டிவிட்டி செய்து கிளவுட் கேமிங்கை விளையாட தொடங்கலாம். ஆகவே, பக்கா கன்ட்ரோலர்கள் இருந்தால் போதும், கன்சோலுக்கு நிகரான கேமிங்களை விளையாடி கொள்ளலாம். ஹை-ஸ்பீடு இன்டர்நெட்டும் அவசியமாகும்.


Click it and Unblock the Notifications








