'அதை'விட அமெரிக்க பெண்களுக்கு இதுதான் ரொம்ப இஷ்டமாம்!

Posted By: Karthikeyan
'அதை'விட அமெரிக்க பெண்களுக்கு இதுதான் ரொம்ப இஷ்டமாம்!

அமெரிக்க பெண்களுக்கு செக்சைவிட வீடியோ கேம் விளையாடுவதற்கு ரொம்ப இஷ்டப்படுவதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

அமெரிக்காவில் 40 சதவீதம் பெண்கள் வீடியோ கேம் விளையாட்டுக்கள் மீது தீராத காதல் கொண்டிருப்பதாக அதில் தெரிவிக்க்பப்ட்டுள்ளது. கடந்த 2008க்கு பிறகு வீடியோ விளையாட்டு விளையாடும் பெண்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து வருகிறதாம்.

அதிலும் 2011ல் அமெரிக்காவில் பாலியல் உறவை விட வீடியோ விளையாட்டுகளையே அதிகமான பெண்கள் விரும்பியதாக அந்த ஆய்வில் ஆய்வு கூறுகிறது. இப்போது வந்திருக்கும் தகவல் என்னவென்றால் வீடியோ விளையாட்டுகள் விளையாடும் ஆண்களிடமிருந்து வீடியோ விளையாட்டு விளையாடும் பெண்களுக்கு பலான மற்றும் ஆபாச மற்றும் பாலியல் வன்முறையைத் தூண்டும் எஸ்எம்எஸ்கள் வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக அந்த பெண்களை விளையாடுவதை நிறுத்திவிட்டு அந்த ஆண்களோடு தனி இடங்களுக்கு சென்று பேச வேண்டும் என்று பல எஸ்எம்எம் அழைப்புகள் வருகின்றன. ஒரு சில நேரம் பயமுறுத்தல், ப்ளாக்மெய்ல் மற்றும் அச்சமூட்டும் எஸ்எம்எஸ்களையும் அந்த ஆண்கள் வீடியோ விளையாட்டில் ஈடுபடும் பெண்களுக்கு அனுப்புகின்றன. அதன் மூலம் இந்த பெண்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்