Home
Gaming

பிரபல ஃபார்கிரை 5 வீடியோ கேமிற்கு என்ன ஆச்சு.?

இதன் மூலம் மட்டுமே நீங்கள் இன்னும் இந்த ஃபார்கிரை 5 விளையாட்டினை டவுன்லோடு செய்து விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

By Siva Lingam

ஃபார்கிரை 5 என்ற வீடியோ விளையாட்டு தற்போது பிஎஸ்4, எக்ஸ்பாக்ஸ் ஒன், மற்றும் விண்டோ கம்ப்யூட்டர்களில் செயல்படாது. இந்த விளையாட்டின் பதிப்பு ஒருசில ரீடெய்ல் கடைகளிலும் மற்றும் டிஜிட்டல் ஸ்டோர்களிலும் மட்டுமே கிடைக்கும். ஆனால் கம்ப்யூட்டர் பதிப்பின் ஸ்டீம் நிக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது. சமீபத்தில் வால்வ் ஸ்டோரில் இந்த விளையாட்டினை வாங்கும் பட்டன் நீக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே ஆர்டர் செய்திருந்தவைகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. மேலும் இந்த விளையாட்டின் பதிப்பு இனிமேல் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், சிங்கபூர், வியட்நாம், தென்கொரியா, நியூசிலாநது, ஹாங்காங் மற்றும் தைவானில் இனிமேல் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் வியட்நாம் உள்ளிட்ட ஒருசில நாடுகளில் கிடைப்பதாக கூறப்படுகிறது.

பிரபல ஃபார்கிரை 5 வீடியோ கேமிற்கு என்ன ஆச்சு.?

நீங்கள் மேலே குறிப்பிட்ட ஏதாவது நாட்டில் இருக்கின்றீர்கள் என்றால், நீங்கள் இந்த விளையாட்டை யூபிசாப்ட்டின் யூபிளே சேவையில் பெற்று கொள்ளலாம். இந்தியாவில் இந்த விளையாட்டை இதன் மூலம் நீங்கள் வாங்கினால் ரூ.4848 ஆகும். ஆனால் இதற்கு முன்னால் இந்த விளையாட்டின் விலை ரூ.3499 என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மட்டுமே நீங்கள் இன்னும் இந்த ஃபார்கிரை 5 விளையாட்டினை டவுன்லோடு செய்து விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென ஒரு விளையாட்டின் விற்பனையை நிறுத்துவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் 'டிராகன் பால் ஃபைட்டர்ஸ்' என்றா விளையாட்டையும் அதன் பதிப்புரிமை பெற்ற பாண்டாய் நாம்கோ நிறுவனம் இந்தியாவில் லைசென்ஸ் பெறவில்லை என்ற காரணத்தால் திடீரென விற்பனையை நிறுத்தியது. இந்த நிலையில் ஃபார்கிரை 5 விளையாட்டுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை விரைவில் சர்செய்து விற்பனையை தொடங்குவோம் என யூமிசாப்ட் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. எனவே வெகுவிரைவில் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தவுடன் இதே போன்ற ஒரு அறிவிப்பினை நாம் வெளியிடுவோம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட இதே யூபிசாப்ட் நிறுவனம் உலகப்புகழ் பெற்ற 'வாட்ச் டாக் 2' என்ற வீடியோகேம் விளையாட்டின் கம்ப்யூட்டர் பதிப்பை இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் விற்பனையை நிறுத்தியது தெரிந்ததே. இந்தியாவில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் சர்வதேச பிரச்சனை காரணமாக இந்த விளையாட்டின் விற்பனை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே ஃபார்பிர 5 விளையாட்டு இந்தியாவில் விற்பனை செய்யாமல் நிறுத்தி வைத்திருப்பது ஒரு தற்காலிகமானதே. விரைவில் மீண்டும் விற்பனைக்கு வரும் என்று நம்பப்படுகிறது.

Best Mobiles in India

English summary
What happened to Far cry 5 PC Game. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X