கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

By Keerthi
|

இன்றைய சூழ்நிலையில் கணிப்பொறி என்பது தவிர்க்கமுடியாதது ஆகிவிட்டது என்றே கூறலாம்.

நமது வீட்டிற்கு யாராவது வந்து, குழந்தை எங்கே என கேக்கும் போது, அவன் வீடியோ கேம் விளையாடிக் கொண்டு இருக்கிறான், கேம்ஸ், கம்ப்யூட்டர்ல்லாம் இல்லாம அவனால் இருக்கவே முடியாது என்று பெருமைப்படும் பெற்றோரா நீங்கள்? கீழே சில உண்மை உதாரணங்களைப் பாருங்கள்.

ஒரு சின்ன பையனுக்கு வெளிச்சத்தை பார்த்தாலே பயமாம், ஜன்னல் திறந்திருப்பதைப் பார்த்தால் அலறுவானாம், ஐந்து வருடங்களாக அவன் ரூமை விட்டு வெளியே வரவே இல்லை. இன்டர்நெட் வீடியோ கேம் விளையாடிக் கொண்டு இருக்கிறான்.

தவறி வெளிச்சத்தை பார்த்து விட்டால் யாராவது எதிரிகள் சுட்டு விடுவார்கள் என்று மேஜைக்கு அடியில் ஒளிந்து கொள்வான்.

பள்ளி,பாடங்கள், விளையாட்டு, நட்பு அனைத்தையும் துறந்து வெறும் வீடியோ கேம் மட்டும் விளையாடி கொண்டு இருக்கிறான்.

இன்னொரு 21 வயது பையன் , உக்கார்ந்து உக்கார்ந்து வேறு எதையும் செய்யாமல் கேம் விளையாடிக் கொண்டிருந்தான். அதனால் இரண்டு மாதங்கள் மூச்சு விட சிரமம்.

Click Here For New Gadgets Gallery

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

கடைசியாக ஐம்பது மணி நேரம் விடாமல் விளையாடினான். பெற்றோர்களால் தடுக்க முடியவில்லை. உறுப்புகள் செயல் இழந்து இறந்தே போனான்

ஒரு தாய்,தந்தை மூன்று மாத குழந்தை. ஃபார்ம்வில் போல ஆன்லைன் குழந்தை வளர்ப்பு விளையாட்டு..கண்ணும் ,கருத்துமாக ஆன்லைன் குழந்தையை இருவரும் போட்டிபோட்டு கொண்டு வளர்த்ததில் நிஜ குழந்தை உணவில்லாமல் பரிதாபமாக இறந்து போனது. அவர்கள் இப்பொழுது சிறையில்..மிக பரிதாபாம்..அந்த குழந்தை எகிப்து மம்மி போல இருந்ததாம், உணவில்லாமல்

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

முப்பத்து மூன்று வயது தாய் ,மூன்று குழந்தைகள் ..சரியாக கவனிக்கபடாமல் போலிஸ் வந்து எச்சரித்தும் பயனில்லை...ஒரு நாளைக்கு பத்து மணி நேரங்களுக்கு மேலாக கேம்.

ஒரு மத்திய வயது நபர்..85மணி நேரம் கேமிங் சென்டரில் சூது விளையாட்டை, இடைவிடாமல் விளையாடி பணம் அத்தனையும் இழந்து செல்போன், உடமைகளை கொடுத்துவிட்டு சென்றாரம்.

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

ஒரு தாய்,தந்தை..மிக பெருமையாக வலம் வருகின்றனர். மகனுக்கு மிகுந்த ஊக்கம் கொடுக்கின்றனர். அவனுக்கு ஸ்பெஷல் கோச்சிங் எல்லாம் உண்டு.
அவனும் சாம்பியன் ஆகி தாய்,தந்தைக்கு பெருமை சேர்க்கிறான்..ஆம் அவன் ப்ரோபெஷனல் வீடியோ கேமர். தேசிய சாம்பியன்..ஒரு நாள் பத்து மணி நேரங்களுக்கு மேல் பயிற்சி செய்கிறான். இதுவும் கேமில்.

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!


ஒரு நாளைக்கு கோடிகணக்கான வருவாய், தெருவுக்கு ,தெரு 24மணி நேர இன்டர்நெட் கேமிங் க்ளப்கள், ஒரு நாட்டில் பாதிக்கு மேற்பட்டவர்கள் கேம் விளையாடுபவர்கள்.

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

அதை விட மோசம பெண் கேட்கும் பொழுது மாப்பிள்ளை ஸ்டார் கிராப்ட் கேமில் எந்த அளவில் இருக்கிறார் என்று வைத்தே மதிப்பாம். இதெல்லாம் தூரத்தில் எங்கோ இல்லை.

ஆசியாவில் ,சவுத் கொரியாவில் உலகிலேயே அதிக அளவில் இன்டர்நெட் கேம் அடிக்க்ஷன் அதிகம் இருக்கும் நாடாக அறியப்படுகிறது.

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

சவுத் கொரியாவில் பத்துக்கு ஒருவர் கேம் அடிமைகள். அதை விட்டு வெளியே வர முடியவில்ல. கேம் டி-அடிக்ஷன் நிலையங்கள் தெருவுக்கு தெரு வந்தும் நிலைமை குறையவில்லை.

கேம் உலகில் கோடிக்கணக்கான பணம் புழங்குகிறது என்றால் அதற்கு கொஞ்சம் நிகராக டி-அடிக்ஷன் நிலையங்களிலும் பணம் கொழிக்கிறது. இதில் மக்கள் மாட்டிக்கொண்டு வெளி வரமுடியாமல் தவிக்கின்றனர்.

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!


அரசாங்கம் இரவு பணிரெண்டு மணி முதல் காலை ஆறு வரை கேம் விளையாடுவதை தடை செய்ய ஆலோசனை செய்கிறது. பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு என்று முயற்சித்து கொண்டு இருக்கிறது. நாட்டின் பெரும்பாலான மக்களை வெளிக்கொண்டு வருவதில் வெற்றி பெற முடியவில்லை.

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

ஒரு பெண்ணிடம் கேட்ட பொழுது.." எங்கள் நாட்டு மக்கள் எதையும் விட்டுக் கொடுக்காமல் ,போட்டி மனப்பான்மையுடன் போராடுபவர்கள்,வெற்றியை ருசிக்க கடின பாதைகளில் பயணிப்பார்கள் அது போல இன்டர்நெட் கேமிலும் போட்டி போட்டுகொண்டு விளையாடுகிறார்கள் " என்று கூறுகிறார்.

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

அந்த நாடு எப்படி மீள போகிறது என்று அரசாங்கமே கையை பிசைகிறது.

உலகிலேயே அதிகம் இண்டர்நெட்டால் இணைக்கப்பட்ட நாடு..தொண்ணூறு சதவிகித மக்கள் வீடுகளில் இன்டர்நெட் இணைப்பு, அதை தவிர எங்கும் கேமிங் சென்டர்கள், பெரியவர்கள்,மாணவர்கள் என்று ஒரு தலைமுறையே கேம் விளையாடி பழக்கப்பட்டவர்கள், போட்டி நிறைந்த பள்ளி கல்வி, சாதாரண விளையாட்டுகள் ஊக்குவிக்க படாதது, நகர நெருக்கடி, ஸ்ட்ரெஸ் போன்ற காரணங்கள் எத்தனை இருந்தாலும் மக்கள் இதை தவறாக பார்க்காத மனப்பான்மையும் முக்கிய காரணம்.

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

நம் இந்தியாவும் மிக அதிக தூரத்தில் இல்லை. நேருக்கு நேர் பேசுவதை குறைத்து இன்டர்நெட்,கேம் மனப்பான்மையை நாம் குழந்தைகளிடம் வளர்க்காமல் இப்பொழுதே சுதாரித்து கொண்டு விழிப்புணர்வோடு செயல்பட்டால் தான் நம் ஊரில் டி-அடிக்ஷன் சென்டர்கள் திறப்பதை நாம் தள்ளிபோட்டு ஆரோக்கியமான வாழ்வை குழந்தைகளுக்கு அளிக்கலாம்.

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

இன்டர்நெட், பேஸ்புக் , ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள், பி.சி., ஸ்மார்ட் போன், ப்ளே ஸ்டேஷன், எக்ஸ்-பாக்ஸ், ஸ்மார்ட் டி.வி, போன்ற விளையாட்டுக்காக உபயோகிக்கும் கருவிகள், அதை தவிர வெளியே மால்களில் விளையாட கேமிங் சோன்கள் என்று சிறுவயதிலையே எல்லா விதங்களிலும் வீடியோ கேமிங் அறிமுக படுத்தப்படுகிறது.

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

கேம் விளையாடி மகனை பறிகொடுத்த பெற்றோர்!

எனவே நம் குழந்தைகளை நாம்தான் காக்க வேண்டும் நண்பர்களே.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X