Home
Gaming

புதிய வீடியோ கேம் சாதனத்தை களமிறக்க வால்வ் தீவிரம்!

By Karthikeyan
புதிய வீடியோ கேம் சாதனத்தை களமிறக்க வால்வ் தீவிரம்!

வீடியோ கேம் சாதனங்களைத் தயாரிப்பதில் முன்னனியில் இருக்கும் வால்வ் மிக விரைவில் தனது புதிய கேமிங் சாதனத்தைக் களமிறக்க இருக்கிறது. வால்வ் நிறுவனத்தைத் நிறுவனரான கேப் நிவெல் கூறும் போது தனது நிறுவனம் ஹார்ட்வேர் ப்ராஜக்டில் அதிக கவனம் செலுத்துவதாகக் கூறுகிறார்.

இது வரை வால்வ் நிறுவனம் வீடியோ கேம் தயாரிப்பதிலும் மற்றும் டிஜிட்டில் பகிர்விலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக இந்த நிறுவனம் ஹாப் லைப் போன்ற வெற்றிகரமான வீடியோ கேம்களைத் தயாரித்து வழங்கி இருக்கிறது.

கேப் நிவெல் மேலும் கூறும் போது ஹார்ட்வேர் துறையில் நுழைவது தமது நிறுவனத்தின் மிக முக்கிய நிகழ்வாகும் என்கிறார். வால்வ் புதிய கேமிங்க சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது என்று ஏற்கனவே பல வதந்திகள் வந்திருக்கின்றன.

சமீபத்தில் வந்திருக்கும் புதிய தகவல் என்னவென்றால் புதிய கேமிங் சாதனத்தை தயாரிப்பதற்காக வால்வ் ஹார்ட்வேர் தயாரிப்பாளர்களோடு சேர்ந்து அதற்கான வேலையில் ஏற்கனவே இறங்கிவிட்டது. இந்த புதிய கேமிங் சாதனத்தில் வால் ஸ்டீம் சாப்ட்வேரை இணைக்க இருக்கிறது. வால்வின் வெற்றிகரமான இந்த சாப்ட்வேர் டிஜிட்டல் மேலாண்மை, மல்டி ப்ளேயர் மற்றும் டிஜிட்டல் பகிர்வு போன்றவற்றிற்காக உள்ளது.

மேலும் வால்வ் ஹார்ட்வேர் தயாரிப்பாளர்களோடு சேர்ந்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் நிறைந்த ஸ்டீம் பாக்சை அறிமுகம் செய்ய இருக்கிறது என்று நம்பகத் தகுந்த தகவல்கள் வருகின்றன. அதன்படி கணினியில் இணைத்து விளையாடக்கூடிய புதிய கேமிங் சாதனத்தை களமிறக்க இருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

இந்த புதிய கேமிங் சாதனம் மிக ஸ்டைலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த சாதனம் 8ஜிபி ரேம், இன்டல் கோர் ஐ7 ப்ராசஸர் மற்றும் என்விடியா க்ராபிக்ஸ் கார்டு போன்ற வசதிகளைக் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த கேமிங் சாதனத்தில் இருக்கும் ஸ்டீம் சாப்ட்வேர் எல்லா விளையாட்டுகளையும் விளையாட வசதியாக இருக்கும். இந்த புதிய கேமிங் சாதனத்தைப் பெற சற்று காத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X