புதிய இடங்களுக்கு சூப்பராக சென்று வர புதிய கார் நாவிகேசன் சாதனம்

By Karthikeyan
|
புதிய இடங்களுக்கு சூப்பராக சென்று வர புதிய கார் நாவிகேசன் சாதனம்

ஒரு புதிய இடத்தை நோக்கி காரில் பயணம் செய்யும் போது அந்த இடத்தை அடைய பலரிடம் வழி கேட்க வேண்டியிருக்கும். அதோடு ஒரு பரபரப்பும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இந்த பிரச்சினைகளைக் களைந்து மகிழ்ச்சியுடன் புதிய இடங்களைக் கண்டு களிக்க டொயோட்டா நிறுவனம் ஒரு புதிய சாதனத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டோ நிறுவனம் நிண்டின்டோ டிஎஸ் என்று ஒரு புதிய நாவிகேசன் ரிமோட் கண்ட்ரோலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த சாதனத்தில் சேரவேண்டிய இடங்கள், அந்த இடங்களுக்கு செல்ல வேண்டிய வழிகள், அந்த வழிகளில் இருக்கும் இயற்கைக் காட்சிகள் மற்றும் அவ்வழித் தடங்களில் இருக்கும் முக்கிய இடங்கள் போன்றவற்றை செட் செய்துவிட்டால் போதும்.

கவலையில்லாமல் பரபரப்பு இல்லாமல் பத்திரமாக அந்த இடங்களைச் சென்று சேர முடியும். ஏனெனில் இந்த சாதனம் சரியான வழிகளைக் காட்டிவிடும்.

இந்த நாவிகேசன் சாதனத்தில் குருமா டிஇ டிஎஸ் என்ற கேம் கார்டை ப்ளூடூத் மூலம் இணைக்க முடியும். இப்போது கேமிங் சாதனமாக இருக்கும் இந்த சாதனம் வாகனம் இப்போது எந்த இடத்தில் இருக்கிறது, மற்றும் எந்த திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது போன்ற தகவல்களைத் தெளிவாகக் காட்டிவிடும்.

இந்த நாவிகேசன் சாதனம் சூப்பராக இருந்தாலும் இதன் விலை சற்றும் அதிகம். அதாவது இந்த சாதனம் 2600 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட இருக்கிறது. அதே நேரத்தில் இதில் இருக்கும் கேம் 90 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட இருக்கிறது. இந்த சாதனமும் அதன் கேமும் ஜப்பானில் மட்டும் விற்கப்பட இருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X