Home
Gaming

கடந்த ஒரு வாரத்தில் டிரெண்டுக்கு வந்த ஆண்ட்ராய்டு கேம்ஸ்!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஒவ்வொரு வாரமும் புதுப்புது கேம்ஸ்கள் அறிமுகமாகி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வாரத்தில் டிரெண்ட் ஆன டாப் ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ்கள் குறித்து தற்போது பார்ப்போம். இந்த ஆண்ட்ராய்டு கேம்ஸ்கள் அனைத்து கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

லூடோ கிங்: . இயல்பான கிராபிக்ஸ்

லூடோ கிங்: . இயல்பான கிராபிக்ஸ்

லூடோ கேம்ஸ்களில் அறிமுகமாகியிருக்கும் அடுத்த கேம்ஸான இது, ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு கிடைத்த மிக அருமையான கேம்ஸ்களில் ஒன்று. இயல்பான கிராபிக்ஸ், விதவிதமான கேம் மோட்கள் ஆகியவை விளையாடுபவர்களுக்கு புதுவித அனுபவங்களை தருகிறது. மேலும் இந்த விளையாட்டை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் விளையாடலாம் என்பதால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் விளையாடுவதற்கு ஏற்ற கேம் என்பதும் ஒரு கூடுதல் சிறப்பு

மேலும் இந்த கேம்ஸ் ஆறு பிளேயர் மோட் உள்ளது இதில் உள்ள கூடுதல் சிறப்புகளில் ஒன்று. மேலும் இந்த கேம்ஸை நீங்கள் உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களுடன் இணைந்து விளையாடும் வசதியும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆன்ட்டி டெர்ரரிஸம் ஷூட்டர்:

ஆன்ட்டி டெர்ரரிஸம் ஷூட்டர்:

இதுவொரு வகையான ஷூட்டிங் கேம் தான். இதன் மூலம் எதிரிகளை பல்வேறு விதமான ஆயுதங்களான துப்பாக்கி, ஸ்னிப்பர் ரைஃபிள் போன்றவற்றின் மூலம் எதிரிகளை அழிக்கலாம். இதில் அமைக்கப்பட்டுள்ள இயல்பான எபெக்ட்டுகள் அனைவரையும் கவரும் வகையிலும் கண்ட்ரோல்களை எளிதில் இயக்கும் வகையிலும் உள்ளது கூடுதல் சிறப்பு ஆகும். இந்த கேம் கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கின்றது

கரினா ஃப்ரி ஃபயர்: ராம்பேஜ்:

கரினா ஃப்ரி ஃபயர்: ராம்பேஜ்:

கரீனா என்ற புகழ்பெற்ற கேம்ஸ்களை உருவாக்கும் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய கேம் தான் இந்த ஃப்ரி ஃபயர். கிராபிக்ஸ், கேம்பிளே மற்றும் கண்ட்ரோல்கள் என பல புதிய அம்சங்கள் இந்த கேமில் உள்ளது. பப்ஜி விளையாட்டுக்கு பதில் தேர்வு செய்ய இந்த கேம் ஒரு சிறப்பான கேம் ஆகும். கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த கேமின் கான்செப்ட் என்னவெனில் ஒரு சிங்கிள் நபர் 49 நபர்களை வீழ்த்துவதற்கு பதிலாக 100 நபர்களை வீழ்த்தலாம் என்பதே

டெம்பிள் ரன் 2:  பெரிதும் கவர்ந்த ஒரு கேம்

டெம்பிள் ரன் 2: பெரிதும் கவர்ந்த ஒரு கேம்

வீடியோ கேம்ஸ் பிரியர்களை பெரிதும் கவர்ந்த ஒரு கேம் என்றால் அது டெம்பிள் ரன் என்பது அனைவரும் அறிந்ததே. அதனுடைய அடுத்த வெர்ஷன் தான் இந்த டெம்பிள் ரன் 2. கிராபிக்ஸ் டிசைன் மற்றும் சில புதிய அம்சங்கள் இதில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. டெம்பிள் ரன் கேமில் உள்ள அதே கான்செப்ட் தான் இதிலும் உள்ளது என்றாலும் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையில் புதிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது

சப்வே சர்ஃபர்ஸ்:  ரன்னர் கேம்ஸ்

சப்வே சர்ஃபர்ஸ்: ரன்னர் கேம்ஸ்

எண்ட்லெஸ் ரன்னர் கேம்ஸ்களில் இதுவும் ஒன்று. ஜேக் என்ற கேரக்டருக்கு விளையாடுபவர்கள் உதவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு நாயிடம் இருந்து ஜாக் தப்பிக்க விளையாடுபவர்கள் உதவலாம். மேலும் ஜாக் தப்பிக்கும் வகையில் பல்வேறு காயின்களையும் சேலஞ்சின்போது கலெக்ட் செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English summary
Top five trending game of the week : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X