புகழின் உச்சியில் இருந்த பப்ஜி- ஓரே அடியாக பாதாளத்திற்கு சென்ற காரணம்.!

|

குறைந்த காலத்தில் பப்ஜி வீடியோ கேம் உலகம் முழுக்கவும் பிரபலமானது. இந்த விளையாட்டிற்கு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அடியமையாகி இருந்தனர் என்றே சொல்ல வேண்டும்.

இந்த பப்ஜி விளையாட்டு ஆசியாவில் தான் அதிகம் பேர் விளையாடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், குறிப்பாக சொல்லப்போனால், இந்தியாவில் தான் அதிகம்.

புகழின் உச்சியில் இருந்த பப்ஜி- ஓரே அடியாக பாதாளத்திற்கு சென்ற காரணம்.

இந்நிலையில், திடீரென உலகம் முழுக்க பப்ஜி விளையாட்டின் மதிப்பு மற்றும் செல்வாக்கு சரி துவங்கியுள்ளது. இதற்கான காரணத்தை நாம் அறியலாம்.!

100 மில்லியன் டவுன்லோடு :

100 மில்லியன் டவுன்லோடு :

கடந்த 2017ம் ஆண்டு முதல் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்கில் பட்டைய கிளப்பு வருகின்றது பப்ஜி கேம். இதை இன்று வரை இந்த விளையாட்டு பிடிக்காத யாரும் இருக்க மாட்டார்கள் என்று தெளிவாக கூறலாம்.

சியோர் முதல் பெரியோர் வரை இன்று வரை ஏராளமானோர் ஆர்வமாக விளையாடி வருகின்றனர். இத்தகைய விளையாட்டை இன்று வரை 100 மில்லியனுக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர்.

உலக முழுக்க பிரபலம்:

உலக முழுக்க பிரபலம்:

கடந்த 2017ம் ஆண்டு விண்டோஸீம், எக்ஸ்பாக்ஸீம் ஒன்னுக்கு முதன் முதலில் வெளியிடப்பட்ட பிறகு, உலக முழுக்க பெரும் வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதளங்கில் பப்ஜி அறிமுகம் செய்யப்பட்டது.

ஒநேரத்தில் 100 பேர் போட்டி:

ஒநேரத்தில் 100 பேர் போட்டி:

ஒரே நேரத்தில் உலகம் முழுக்க இருக்கும் 100 பேர் இதில் இணையம் மூலம் இந்த விளையாட்டில் இணையலாம், மீதமுள்ள 99 பேர் எதிரியாக இருப்பார்கள். இறுதி வரை களத்தில் இருப்பரே அவரே வெற்றியாளர்.

 மூன்று கோடி பேர் விளையாடுகின்றனர்:

மூன்று கோடி பேர் விளையாடுகின்றனர்:

இதுவரை 20 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ள விளையாட்டை, ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று கோடி பேர் விளையாடுகின்றனர்.

சிங்கப்பூர் தலைமை நிறுவனம்:

சிங்கப்பூர் தலைமை நிறுவனம்:

சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு பப்ஜி கார்பொரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இன்று வரை 100 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இதுவரை இந்த விளையாட்டை பதிவிறக்கும் செய்துள்ளார்.

பரிசுத் தொகை அறிவிப்பு:

பரிசுத் தொகை அறிவிப்பு:

உலகம் முழுவதும் இந்த விளையாட்டிற்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து, 'பப்ஜி கார்பொரேஷன்', டென்சென்ட் கேம்ஸ்' ஆகியவை இணைந்து ஆறு பிராந்தியங்களை சேர்ந்த 20 அணிகள் தேர்ந்தெடுத்து, 600,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை கொண்ட தனது முதலாவது சர்வதேச போட்டியை கடந்த நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனைக்கு காரணம்:

சாதனைக்கு காரணம்:

இதுவரை மைக்ரோசாப்ட்டின் எக்ஸ்-பாக்ஸ், சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் போன்ற கேம்களுக்கான பிரத்யேக சாதனங்களில் மட்டுமே சாத்தியமானதாக இருந்த பப்ஜி போன்ற விளையாட்டுகள், தற்போது கேம் பிரியர்களின் கைகளில் தவழும் அலைபேசியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதே இதன் சாதனைக்கு காரணமாக கருதப்படுகிறது

வரவேற்பு குறைந்தது:

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பப்ஜி விளையாட்டுக்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பியிருந்த நிலையில், ட்விட்டரில் அந்த விளையாட்டுக்கு இருந்துவந்த வரவேற்பானது, மிகவும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீழ்ச்சிக்கு காரணம்:

வீழ்ச்சிக்கு காரணம்:

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த விளையாட்டு குறித்த உரையாடல்கள் உச்சத்தில் இருந்தநிலையில், இவ்விளையாட்டு குழந்தைகள் மற்றும் இளைஞர்களை சமூக விரோத செயல்களுக்கு தூண்டுவதாக அண்மையில் எழுந்த கடும் புகார்களை அடுத்தே, இந்த வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

4 இடத்தில் பப்ஜி:

4 இடத்தில் பப்ஜி:

அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டு முடிவில், ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட விளையாட்டுகளின் பட்டியலில் சரிவைச் சந்தித்த பப்ஜி, நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ‘ஃபேட் கிராண்ட் ஆர்டர்' எனும் விளையாட்டே இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
the game dropped out on twitter is the game : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X