வீடியோ கேம் பிரியர்களைக் குஷிப்படுத்தும் புதிய மவுஸ்!

Posted By: Karthikeyan
வீடியோ கேம் பிரியர்களைக் குஷிப்படுத்தும் புதிய மவுஸ்!

ஸ்டீல்சீரிஸ் நிறுவனம் பல கேமிங் சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது கானா என்ற ஒரு புதிய கேமிங் மவுசை அறிமுகம் செய்து இருக்கிறது.

இந்த கேமிங் மவுஸ் கருப்பு நிறத்தில் அழகான டிசைனில் வந்திருக்கிறது. இந்த மவுசில் உள்ள சக்கரம் மற்றும் டிபிஐ பட்டன் ஆகியவை ஆரஞ்சு நிறத்தில் வந்திருக்கின்றன. இந்த கருப்பு ஆரஞ்சு கலவையில் வரும் இந்த கேமிங் மவுஸ் கேம் பிரியர்களைக் கண்டிப்பாக பரவசப்படுத்தும்.

மேலும் இந்த கானா மவுஸ் எளிமையாக இருந்தாலும் கைக்கு அடக்கமாக அதே நேரத்தில் பயன்படுத்துவதற்கு சூப்பராக இருக்கிறது. இந்த கேமிங் மவுசில் இருக்கும் 2 மீ யுஎஸ்பி கேபிள் துணியால் மூடப்பட்டுள்ளது. அதனால் இந்த கேபிளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

இந்த மவுசுக்கு சிடி தரப்படவில்லை. மாறாக ஸ்டீல்சீரிசின் இணையதளத்திற்குள் சென்று இதன் சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சாப்ட்வேரின் பெயர் ஸ்டீல்சீரிஸ் என்ஜின் ஆகும். அதன் மூலம் இந்த கேமிங் மவுஸ் இயங்க ஆரம்பித்துவிடும்.

இந்த கானா கேமிங் மவுசின் விலை 35 பவுண்டுகளாகும். இந்த கேமிங் மவுஸ் கேமிங் பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot