இந்தியாவில் வீடியோகேம் தயாரிக்கும் போட்டி!

Posted By: Karthikeyan
இந்தியாவில் வீடியோகேம் தயாரிக்கும் போட்டி!

பிரபலமான வீடியோ கேம்களைத் தயாரிப்பதில் ஸ்க்வர் எனிக்ஸ் நிறுவனம் முன்னனியில் இருந்து வருகிறது. இந்த நிறுவனம்தான் மிகவும் பிரபலமான பைனல் பேன்டஸி, டூம் ரைடர், கிங்டம் ஹார்ட்ஸ் மற்றும் ஹிட்மேன் போன்ற வீடியோகேம்களை தயாரித்து களமிறக்கியது.

இப்போது இந்த எனிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் வீடியோகேம் தயாரிப்பாளர்களுக்கு ஒரு போட்டியை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. அதன் மூலம் இந்தியாவில் இருக்கும் வீடியோகேம் தயாரிப்பு திறமையை வெளிக்கொணர திட்டமிட்டிருக்கிறது. இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.10 லட்சம் ஆகும்.

இந்த போட்டியில் இந்தியாவிலிருந்து யாரும் கலந்து கொள்ளலாம். குறிப்பாக அடுத்த தலைமுறைக்கான புதிய சிந்தனையுடன் வரும் வீடியோ கேம்களுக்கு மிகப் பெரிய பரிசுத் தொகைக் காத்திருக்கிறது.

மேலும் இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் ப்ராவ்சர் அடிப்படையில் அமைந்த கணினிகளில் இயங்கு வீடியோ கேம்களை தயாரிக்க வேண்டும். அந்த கேம்கள் ஏற்கனவே வெளி உலகத்திற்கு வந்திருக்கக்கூடாது. மேலும் அந்த கேம்கள் தயாரிக்கும் குழுவில் ஒருவராவது இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை இந்த ஏப்ரல் 25ல் இருந்து பதிவு செய்து கொள்ளலாம். இறுதிப் போட்டிக்குள் நுழைபவர்களின் பெயர்கள் நவம்பர் 30ல் அறிவிக்கப்படும். டிசம்பர் 20ல் வெற்றி பெற்றவரின் பெயர் அறிவிக்கப்படும்.

இந்த போட்டியின் முடிவில் மொத்தம் 8 கேம்கள் தேர்ந்தெடுக்கப்படும். அதில் 5 கேம்களுக்கு 2வது இடம் வழங்கப்படும். அந்த 5 கேம்களில் ஒவ்வொரு கேமுக்கும் ரூ.150000 வீதம் வழங்கப்படும். 2 கேம்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். அந்த இரண்டு கேம்களில் ஒவ்வொரு கேமுக்கும் 3 லட்சம் வீதம் வழங்கப்படும். இறுதியாக முதலிடம் பிடிக்கும் கேமுக்கு ரூ.10,00,000 வழங்கப்படும்.

இந்த போட்டியின் மூலம் பல புதிய கேம்களை உருவாக்க முடியும் என்று எனிக்ஸ் நம்புகிறது. குறிப்பாக ட்ராகன் க்வஸ்ட் என்ற மிகவும் பிரபலமான கேம் ஜப்பானில் இவ்வாறு நடத்திய போட்டியின் விளைவாகவே உருவானதாகும். ஆகவே இந்தியாவில் நடக்கும் இந்த வீடியோ கேம் தயாரிப்பு போட்டியில் உருவாகும் கேம்கள் இந்தியாவின் வாசம் கலந்து வரும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot