Home
Gaming

மைக்ரோசாப்ட்டின் புதிய எக்ஸ்பாக்ஸ் கண்ட்ரோலர்கள்!

By Karthikeyan

மைக்ரோசாப்ட்டின் புதிய எக்ஸ்பாக்ஸ் கண்ட்ரோலர்கள்!
சமீபத்தில் மைக்ரோசாப்ட் தனது சிறப்பு க்ரோம் வரிசை எக்ஸ்பாக்ஸ் கேமிங் கண்ட்ரோலர்களை அல்ட்ரா நவீன வசதிகளுடன் அறிவித்திருக்கிறது. இந்த புதிய கேமிங் சாதனங்கள் வரும் மே மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த 3 புதிய கேமிங் சாதனங்கள் மிக வேகமா கேம்களையும் சப்போர்ட் செய்யும் திறன் கொண்டவை. இந்த 3 கேமிங் சாதனங்களும் வயர்லஸ் தொழில் நுட்பம் கொண்டவை.

இந்த புதிய எக்ஸ்பாக்ஸ் கேமிங் சாதனங்கள் பல சிறந்த தொழில் நுட்பங்களைக் கொண்டு வருகின்றன. அதாவது நெகிழ்வு தன்மை கொண்ட ஒரு 30 அடி தூரம் கொண்ட 2.4 ஜிஹெர்ட்ஸ் வயர்லஸ் தொழில் நுட்பம் கொண்டிருக்கிறது. இதில் உள்ள இன்டக்ரேட்டட் ஹெட்செட் போர்ட் எக்ஸ்பாக்ஸ் லைவ் ப்ளேயை சப்போர்ட் செய்யும். அதுபோல் இதில் உள்ள அதிர்வுகளையும் சரிசெய்ய முடியும்.

இந்த கேமிங் சாதனத்தை பார்த்த உடனே சிறுவர்கள் வாங்க அடம் பிடப்பார்கள் அந்த அளவிற்கு இந்த சாதனம் சிறுவர்களைக் கவரும் விதத்தில் கவர்ச்சியாக இருக்கிறது. அதாவது மஞ்சள், சிவப்பு, ஊதா மற்றும் பச்சை ஆகிய வண்ணங்களில் வருகிறது. கட்டப்பாட்டுப் பட்டன்கள் அணைத்தும் இந்த சாதனத்தின் மையத்தில் இருக்கின்றன. அதனால் வீடியோ கேம்களை இயக்குவது எளிதாக இருக்கும்.

மேலும் இந்த சாதனத்திற்கு ஒரு கைடும் வழங்கப்படுகிறது. மேலும் பல அற்புதமான சிறப்பு அம்சங்களையும் இந்த கேமிங் சாதனம் வழங்குகின்றன.

குறிப்பாக வீடியோ கேம் பிரியர்கள் மற்றும் சிறுவர்களை ஆகியோரை இந்த புதிய எக்ஸ்பாக்ஸ் கேமிங் சாதனம் ஆனந்தத்தில் ஆழ்த்தும் என நம்பலாம். இதன் விலை ரூ.3000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X