Home
Gaming

சோனி வழங்கும் இலவச விளையாட்டுகள்

By Karthikeyan
 சோனி வழங்கும் இலவச விளையாட்டுகள்

சோனியின் ப்ளேஸ்டேசன் 3 என்ற வீடியோ விளையாட்டு சாதனம் உலக அளவில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த சாதனத்திற்கு ஏராளமான தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சாதனத்தில் சோனியின் ப்ளேஸ்டேசன் ப்ளஸ் என்ற சேவையை பெறுபவர்களுக்கு ஏராளமான கூடிஸ்களையும் மற்றும் அவர்கள் விளையாடும் விளையாட்டுகளுக்கு சிறப்புத் தள்ளுபடிகளையும் சோனி வழங்கி வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு சில முக்கியமான வீடியோ விளையாட்டுகளை இலவசமாக வழங்க இருக்கிறது சோனி. குறிப்பாக ப்ளேஸ்டேசன் ரசிகர்களுக்கு சோனியின் இந்த அறிவிப்பு உண்மையாகவே இனிப்பான செய்தியாக இருக்கும் என்பது உண்மை.

குறிப்பாக மிகவும் பிரபலமான ரெட் டெட் ரிடம்சன் என்ற விளையாட்டை இலவசமாக சோனி வழங்க இருக்கிறது. இந்த விளையாட்டை வரும் அக்டோபர் 2 வரை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

இரண்டாவதாக ஸ்காட் பில்க்ரிம் விஎஸ் த வேர்ல்டு என்ற விளையாட்டையும் செப்டம்பர் 12 முதல் டிசம்பர் 4 வரை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். மேலும் டபுள் ட்ராகன் என்ற விளையாட்டையும் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். ஆனால் அதற்காகன தேதியை இன்னும் சோனி அறிவிக்கவில்லை.

இறுதியாக மெசினரியம் என்ற விளையாட்டையும் இந்த மாதம் சோனி இலவசமாக வழங்குகிறது. எனவே மேற்சொன்ன இந்த சூப்பர் விளையாட்டுகளை ப்ளேஸ்டேசன் ரசிகர்கள் இலவசமாக இனி விளையாடலாம்.

மேலும் ப்ளேஸ்டசேன் ப்ளசுக்கான ஆண்டுக் கட்டணத்தையும் சோனி தற்போது 25 சதவீதம் குறைத்திருக்கிறது. இனி இதன் கட்டணமாக ரூ.2,200ஆக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X