சோனி ப்ளேஸ்டேஷன் விற்பனை மந்தம்!

By Karthikeyan
|
சோனி ப்ளேஸ்டேஷன் விற்பனை மந்தம்!

சோனியின் ப்ளேஸ்டேசன் உலக அளவில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. ஏனெனில் சோனியின் ப்ளேஸ்டேசனுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அதனால் சோனியின் ப்ளேஸ்டேன் விற்பனையிலும் வெற்றி பெற்று வருகிறது.

குறிப்பாக கடந்த ஜூன் மாதம் வரை 2.2 மில்லியன் சோனியின் பிஎஸ் விட்டா விளையாட்டு சாதனம் விற்பனை ஆகியிருப்பதாக சோனி அறிவித்திருக்கிறது. மே 2012 வரை இதன் விற்பனை 1.8 மில்லியனாக இருந்தது.

ஆனாலும் இந்த விற்பனை போதுமானதாக இல்லை என்று சோனி கூறியிருக்கிறது. மேலும் இளைஞர்களிடம் இந்த ப்ளேஸ்டேசனை எடுத்துச் செல்ல சோனி சரியான விற்பனை உத்தியைக் கடைபிடப்பதில்லை என்று கூறியிருக்கிறது.

இந்தியாவில் இந்த பிஎஸ் விட்டா சாதனம் ரூ.19,990க்கு விற்கப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை இந்த விலை சற்று அதிகமே. இதே விலைக்கு முழுமையான பிஎஸ்3யையும் அல்லது எக்ஸ்பாக்ஸ் 360யும் வாங்க முடியும்.

வீடியோ விளையாட்டு சாதன தயாரிப்பில் நீண்ட காலமாக நின்டின்டோ கோலோச்சி வருகிறது. ஆனால் இதுவரை நேரடியாக அந்நிறுவனம் இந்தியாவில் தனது விளையாட்டு சாதனத்தை களமிறக்கவில்லை. அந்த நிலையில் இந்தியாவில் போட்டியில்லாமல் இருக்கும் சோனி பிஎஸ் விட்டா, தனது விலையைக் குறைத்தால் கண்டிப்பாக விற்பனையில் சாதனை படைக்கும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X