ஸ்டீல்சீரிஸ் வழங்கும் அற்புதமான வீடியோ கேம் மவுஸ்!

Posted By: Karthikeyan
ஸ்டீல்சீரிஸ் வழங்கும் அற்புதமான வீடியோ கேம் மவுஸ்!

வீடியோ விளையாட்டுகளுக்கான பல தரமான சாதனங்களை அறிமுகம் செய்திருக்கும் ஸ்டீல்சீரிஸ் நிறுவனம் சமீபத்தில் சென்செய் ரா என்று ஒரு புதிய விளையாட்டு மவுசை களமிறக்கி இருக்கிறது. இந்த விளையாட்டு மவுஸ் விளையாட்டுப் பிரியர்களின் விளையாட்டு அனுபவத்தை பல மடங்கும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சென்செய் மவும் விளையாட்டிற்காகவே பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் மேற்பகுதி ரப்பரால் செய்யப்பட்டுள்ளதால், நீண்ட நேரம் இந்த மவுசைக் கொண்டு விளையாடினாலும் கைகளிலிருந்து இந்த மவுஸ் நழுவாமல் கிரிப்பாக இருக்கும். மேலும் இது எக்ஸ்எல் அளவிலான யுபிஇ கொண்டிருப்பதால் இந்த மவுஸ் மிகவும் உறுதியாக இருக்கும்.

இந்த மவுஸ் எல்இடி இலூமினேசன் கொண்டு வருகிறது. அதோடு இதில் அட்வான்ஸ்டு கஸ்டமைசேஷனும் உள்ளது. இதனால் இதன் மூலம் அதிகமான பைல்களை உருவாக்கி அதை சேமித்து வைக்கவும் முடியும்.

மேலும் இந்த மவுஸ் உள்ளங்கைக்கு அடக்கமாக இருப்பதால் இதைக் கையாள்வது மிக எளிதாக இருக்கும். இதன் இரண்டு மவுஸ்கள் ரூ.3,000க்கு விற்கப்படுகிறது. இதன் விலை அதிகமாக இருப்பது போல் தெரிந்தாலும் இது அளிக்கும் விளையாட்டு அனுபவம் மிக அபாரமாக இருக்கும் என்பது உறுதி.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot