4 கோடி பரிசு வழங்கிய பப்ஜி மொபைல் கேம்.! இனி கேம் விளையாடின வீட்ல திட்டமாட்டாங்க.!

பப்ஜி மொபைல் ஸ்டார் குளோபல் சேலஞ் டோர்னமெண்ட் நவம்பர் 29 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 1 வரை துபாய் இல் நடைபெற்றது. தற்பொழுது ஒருவழியாக பப்ஜி மொபைல் ஸ்டார் குளோபல் சேலஞ் முடிவிற்கு வந்துள்ளது.

|

பப்ஜி மொபைல் ஸ்டார் குளோபல் சேலஞ் டோர்னமெண்ட் நவம்பர் 29 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 1 வரை துபாய் இல் நடைபெற்றது. தற்பொழுது ஒருவழியாக பப்ஜி மொபைல் ஸ்டார் குளோபல் சேலஞ் முடிவிற்கு வந்துள்ளது.

பப்ஜி மொபைல் ஸ்டார் குளோபல் சேலஞ் டோர்னமெண்டில் வெற்றிபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு ரூ.4,20,39,000 கோடி பரிசாக வழங்கப்பட்டுள்ளது தான் தற்பொழுது வைரலான செய்தி.

கேம் பட்டியலில் முதல் இடம்

கேம் பட்டியலில் முதல் இடம்

பப்ஜி மொபைல் கேம் இளைஞர் மற்றும் குழந்தைகளிடையே உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பப்ஜி மொபைல் கேம் இந்த வருடத்தின் சிறந்த கேமிற்கான பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பப்ஜி மொபைல் ஸ்டார் குளோபல் சேலஞ்

பப்ஜி மொபைல் ஸ்டார் குளோபல் சேலஞ்

பப்ஜி நிறுவனம் இந்த ஆண்டிற்கான டோர்னமெண்ட் அறிவிப்பை அண்மையில் அறிவித்திருந்தது, அதன்படி நவம்பர் 29 ஆம் தேதி தனது பப்ஜி மொபைல் ஸ்டார் குளோபல் சேலஞ் டோர்னமெண்டை துவங்கியது. போட்டியில் பங்குபெறும் போட்டியாளர்களின் 4 பேர் கொண்ட குழு, சில விதிமுறைகளுக்கு உட்பட்டுத் தேர்வு செய்யப்பட்டது.

நிபந்தனை

நிபந்தனை

இந்த நிகழ்வு அனைவருக்கும் திறக்கப்படவில்லை, மேலும் யூடியூப் கேமிங் சேனல், ட்விச், பேஸ்புக் லைவ், ஸ்மாஷ்காஸ்ட் டிவி, மிக்ஸர், கியூப் டி.வி, நிமோ டிவி போன்ற பல தளங்களில் குறைந்தபட்சம் 1,000 ரசிகர்களைக் கொண்டிருக்கும் நபருக்கே அனுமதி வழங்கப்படும் என்பது நிபந்தனை. அவரின் கீழ் 3 நண்பர்களை அவரே தேர்வு செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந் குழு வெற்றி

தாய்லாந் குழு வெற்றி

டிசம்பர் 1 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியின், இறுதிக்கட்ட போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தாய்லாந்தை சேர்ந்த RRQ Athena குழு ஆசியா பிரிவில் வெற்றிபெற்றது. பப்ஜி மொபைல் ஸ்டார் குளோபல் சேலஞ் போட்டியில் வெற்றிபெற்ற இந்தக் குழுவிற்கு 200,000 டாலர் பரிசாக வழங்கப்பட்டது, இந்திய மதிப்பின்படி ரூ.1,40,13,000 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

ரூ.4.5 கோடி பரிசு

ரூ.4.5 கோடி பரிசு

நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த பப்ஜி மொபைல் ஸ்டார் குளோபல் சேலஞ் டோர்னமெண்டின் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு ஆசியா, அமெரிக்கா போன்ற பிரிவுகளில் மொத்தம் ரூ.4.5 கோடி வரை பரிசு வழங்கி பப்ஜி நிறுவனம் தனது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
RRQ Athena from Thailand crowned champions of PUBG Mobile Star Challenge 2018 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X