புதிய ஆங்கிரி பேர்ட்ஸ் வெர்ஷன் வீடியோ ட்ரெயிலர்!

Posted By: Staff
புதிய ஆங்கிரி பேர்ட்ஸ் வெர்ஷன் வீடியோ ட்ரெயிலர்!
புதிய ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டு வெர்ஷனை அறிமுகம் செய்கிறது ரோவியோ நிறுவனம். கோபம் என்பது மனிதர்களுக்கிடையே மட்டும் நடப்பது அல்ல. பறவைகளிடமும் மற்று உயிரனங்கிளிடமும் வெளிப்பட்டு வருகிறது.

ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டு மக்களின் பாராட்டுதலை பெற்றதற்கு காரணம் என்ன என்பதையும் பார்க்கலாம். அன்பு என்பது எல்லோரிடமும் மறைந்திருக்கும் ஒரு விஷயம் தான். இது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது.

பறவைகள் தனது முட்டைகளை பொன்னையும் விட உயர்ந்தாக பாதுகாத்து வருவதை நேரிலேயே பார்த்திருப்போம். அப்படி பாதுகாத்து வரும் முட்டைகளை பன்றிகள் அபகரிக்க பார்க்கின்றன. இதனால் கோபமடையும் தாய் பறவை அனகோன்டாவாக மாறி சீறுவதை இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டு படம் பிடித்து காட்டுகிறது.

இதில் பறவைகளின் கோபம் நியாயமானது தான். இதனால் பலரையும் இந்த விளையாட்டு ஈர்த்து அதிகபட்சமான ஓட்டுக்களையும் பெற்றுள்ளது. ஆனால் இப்போது உருவாக்கப்பட்டிருக்கும் புதிய வெர்ஷனான ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கம்.

இதில் பன்றிகள் சேர்ந்து பறவையை, தாக்குவது போல் புதிய ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. இது எந்த அளவு மக்களை ஈர்க்கும் என்று பார்க்கலாம். இங்கே பார்வைக்காக ட்ரெயிலர் வீடியோவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot