அட்டகாசமான வீடியோ கேம் அனுபவத்திற்கு புதிய ரோசட் மவுஸ்!

By Karthikeyan
|
அட்டகாசமான வீடியோ கேம் அனுபவத்திற்கு புதிய ரோசட் மவுஸ்!

கணினியில் வீடியோ கேம் விளையாடும் போது மிகவும் உதவியாக இருக்கும் சாதனம் அதன் மவுஸ் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த மவுஸ் மிக உறுதியா மற்றும் லகுவாக இருந்தால் வீடியோ கேம் விளையாடும் போது அது பேருதவியாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சிறந்த ரோசட் சாவு என்ற புதிய மவுசை ரோசட் ஸ்டூடியோஸ் வழங்கி இருக்கிறது.

இந்த மவுஸ் உலக அளவில் நடைபெறும் சிஇபிட்டி நிகழ்வின் போது அறிமுகப்படுத்தப்படும் என்று ரோசட் அறிவித்திருக்கிறது. இந்த மவுசின் ஒரு சில முக்கிய அம்சங்கள் மட்டுமே இதுவரை வெளிவந்திருக்கின்றன.

அதாவது இந்த ரோசட் மவுஸ் 4000 டிபிஐ ஆப்டிக்கல் சென்சாரைக் கொண்டிருக்கிறது. ஈசி சிப்ட்[+] தொழில் நுட்பத்தை இந்த தாங்கி வருகிறது. 7 பட்டன் டிசைனுடன் வரும் இந்த மவுஸ் 16.8 மில்லியன் வண்ணங்களை வழங்குகிறது. மேலும் இந்த மவுஸ் கைக்கு அடக்கமாக இருக்கிறது. மேலும் இந்த மவுஸ் மென் தொடு தளம், ப்ரைடட் கேபிள் மற்றும் ரோசட் அச்சீவ்மென்ட்ஸ் டிஸ்ப்ளே போன்ற வசதிகளையும் வழங்குகிறது.

இந்த மவுஸ் கருப்பு நிறத்தில் அருமையான டிசைனைக் கொண்டிருக்கிறது. இந்த மவுசில் உள்ள கேபிள் மிகவும் உறுதியாக இருப்பதால் இதை சற்று கடினமாகப் பயன்படுத்தினால் இந்த கேபிளுக்கு ஒரு பிரச்சினையும் ஏற்படாது.

இந்த ரோசட் புதிய மவுசைப் பற்றிய மற்ற தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. சிபிடி நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்த மவுஸ் வீடியோ கேம் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என நம்பலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X