மாஸ் எஃபெக்ட் வீடியோ கேமிற்கான புதிய அக்சஸரிகள்!

Posted By: Karthikeyan
மாஸ் எஃபெக்ட் வீடியோ கேமிற்கான புதிய அக்சஸரிகள்!

மாஸ் எஃபெக்ட் என்பது வீடியோ கேம் ப்ரியர்கள் அறிந்த ஒரு பிரபலமான வீடியோ விளையாட்டு. இந்த வீடியோ கேம் பல விருதுகளையும் வாங்கி இருக்கிறது. இந்த வீடியோ கேமின் வெற்றியைப் பார்த்த இதனை உருவாக்கியவர்களான பயோவேர் இரண்டாவது முறையாகவும் இந்த வீடியோ கேமை களமிறக்கினர். அதுவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக ஐஜிஎன்.காம் மற்றும் கேம்ஸ்பாட்.காம் போன்ற இணையதளங்கள் இதற்கு பல விருதுகளை வழங்கி கவுரவித்தன.

பின் இந்த மாஸ் எபக்ட் கேமின் மூன்றாவது பதிப்பு இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கேம் இந்த ஆண்டின் மிகச் சிறந்த கேமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இதுதான் இறுதி பதிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இறுதிப் பதிப்பு வரும் மார்ச் மாதம் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிஎஸ்3, எக்ஸ்பாக்ஸ் மற்றும் விண்டோஸ் பிசி போன்ற எல்லா இயங்குதளங்களிலும் இந்த கேம் இருக்கும் என்று நம்பலாம்.

இந்த நேரத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ரேசர் என்ற வீடியோ கேம் நிறுவனம் மாஸ் எபக்ட் கேமிற்கான் அக்சஸரிகளை அறிமுகப்படுத்த இருக்கிறது. ஏற்கனவே இந்த கேமின் 2 பதிப்புகள் வெற்றி பெற்றுள்ளதால் இந்த மூன்றாவது பதிப்பும் வெற்றி பெறும் என ரேசர் நம்புகிறது. மேலும் பலரும் இந்த அக்சஸரிகளை வாங்குவர் என்று நம்புகிறது. மேலும் இந்த அக்சஸரிகள் அனைத்தும் டிஎல்சி கோடுகள் கொண்டு வருகின்றன.

ரேசரின் மாஸ் எபக்ட் 3 கேமின் அக்சஸரிகள் மற்றும் பெரிபரல்கள் ஆகியவை சிறப்பான சிந்தனை கொண்ட ப்ளாக்விடோ அல்டிமேட் கீபோர்டு, இம்பரேட்டரி மவுஸ், ஒரு 360 ஹெட்போன், ஒன்சா டோர்னமன்ட் எடிசன் 360 கன்ட்ரோலர், ஐபோன் 4 கேஸ், மெசஞ்சர் பேக் மற்றும் வெஸ்புலா மவுஸ்பேட் போன்றவற்றைக் கொண்டுள்ளன.

ப்ளாக்விடோ அல்டிமேட் கீபோர்ட் ஒரு பிரபலமான கீபோர்டு ஆகும். மேலும் கேம் விளையாடும் போது இது மிகவும் வசதியாக இருக்கும். அதே நேரத்தில் நீண்ட ஆயுளையும் கொண்டிருக்கும். இந்த ரேசரின் அக்சஸரிகளை வாங்க இப்போதே விண்ணப்பிக்கலாம். வரும் மார்ச் மாதத்தில் கைகளில் கிடைத்துவிடும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot