PUBG: ரூ.1 லட்சம் முதல் பரிசுடன் பப்ஜி போட்டிக்கு தமிழகத்தில் ஏற்பாடு.!
நாடு முழுவதும் பப்ஜி விளையாட மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று தான் கூறவேண்டும், அதன்படி உலகம் முழுவதும் இந்த விளையாட்டு அதிக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பப்ஜி விளையாட்டு அதிகம் கவர்ந்துள்ளது.

ரூ.1.லட்சம்
மேலும் சிறுவர் மற்றும் இளைஞர்களை பெரிதளவு சீரழிக்கும் இந்த ஆன்லைன் பப்ஜி கேம்-ஐ சமூக ஆர்வலர்கள்தடை செய்ய வலியுறுத்தி வரும் நிலையில் ரூ.1.லட்சம் முதல் பரிசுடன் காரைக்குடி அருகே போட்டி நடத்தஏற்பாடு நடந்து வருகிறது.

சமூக ஆர்வலர்கள்
இந்த போட்டியினால் சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றும் தான் கூறவேண்டும். குறிப்பாகஇளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இந்த பப்ஜி கேமிற்கு அடிமையாக உள்ளனர்,இந்த விளையாட்டைமொபைலில் விளையாடலாம் என்பதால் இரவு,பகல் என பாராமல் சாப்பிடாமல் விளையாடிக் கொண்டே தான் இருக்கின்றனர்.

இந்த பப்ஜி விளையாட்டை விளையாட விடாமல் பெற்றோர் தடுத்ததால் சிறுவர்கள், இளைஞர்கள் தற்கொலைசெய்து கொண்ட செய்திகள் அனைமையில் வெளிவந்தது, மேலும் மாணவவர்கள் பலர் பள்ளி,கல்லூரிக்கு செல்லாமல்
இந்த விளையாட்டில் மூழ்கினர்.

6மணி நேரம்
சில மாதங்களுக்கு முன்பு இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்,இதையடுத்து பப்ஜி கேம்-ஐ ஒரு நாளைக்கு 6மணி நேரம் மட்டுமே விளையாட முடியும் என்ற வரையரையை அரசுகொண்டு வந்தது.

காரைக்குடி அருகே
ஆனாலும் இந்த விளையாட்டை முழுமையாக தடை செய்ய வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர், இந்தநிலையில் காரைக்குடி அருகே கல்லலில் மாசி மாத தேர் திருவிழாவையொட்டி தனியார் மொபைல் கடைசார்பில் பப்ஜி கேம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அறிவிக்கப்பட்ட இந்த போட்டி மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது என்றும், இதில் முதல் பரிசாக 1லட்சமும்,2-ம் பரிசாக ரூ.50ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.20ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குழுவில் 4பேர் இடம்பெறலாம்
குறிப்பாக ஒருபோட்டிக்கு 25குழுக்கள் அனுமதிக்கப்படுவர் எனவும், ஒரு குழுவில் 4பேர் இடம்பெறலாம் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் பங்கேற்க இதுவரை ஆயிரத்திற்கும் மேறபட்டோர் ஆன்லைனில்
பதிவு செய்துள்ளனர்.

ரூ.300 கட்டணமாக வசூலிக்கிறோம்
ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுகிறன்றனர் என்றும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பப்ஜி போட்டி நடத்தப்படுகிறது எனத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த போட்டியின்போது ஆன்லைன்பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றும் கூறியுள்ளனர். இந்த போட்டியில் ஒரு குழவிற்கு ரூ.300கட்டணமாக வசூலிக்கிறோம் என்று தெரிவித்தள்ளனர். ஆனாலும் இந்த போட்டிக்கு சமூக ஆர்வலர்கள் பலவிதமானகருத்துக்களை கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications








