Home
Gaming

6 மணி நேரம் மட்டும் தான் இனி தினசரி பப்ஜி விளையாட முடியும்.! புதிய தடையால் இளைஞர்கள் சோகம்.!

இதுபோன்ற கட்டுப்பாடு பப்ஜி விளையாட்டுக்கு வருவது, மிகவும் வரவேற்க்க தக்கது, கண்டிப்பாக பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை

நாடு முழுவதும் பப்ஜி விளையாட மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று தான் கூறவேண்டும்,அதன்படி உலகம் முழுவதும் இந்த விளையாட்டு அதிக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள்
வரை பப்ஜி விளையாட்டு அடிமையாகி வருவது.

ஆதே சமயம் பல பெற்றோர்களையும் சங்கடத்தில் அழ்த்தியுள்ளது இந்த பப்ஜி விளையாட்டு, எல்லாவற்றுக்கும் மேலாக, தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த 20வயது இளைஞரின் உயரையும் பறித்தது. தொடர்ந்து 45 நாட்களாக பப்ஜி கேமை விளையாடி வந்த இளைஞரின் கழுத்து நரம்புகள் முழுமையாக பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிரவைத்துள்ளது.

 6மணி நேரத்துக்கு மேல் விளையாட முடியாது

6மணி நேரத்துக்கு மேல் விளையாட முடியாது

தற்சமயம் வந்த அறிவிப்பு என்னவென்றால் பப்ஜி வீடியோ கேமை தினமும் 6மணி நேரத்துக்கு மேல் விளையாட முடியாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது. ஆனாலும் இந்த தகவல் உறுதி
செய்யப்படவில்லை. ஆனால் நீங்கள் இன்று 6மணி நேரம் பப்ஜி விளையாடி வீட்டீர்கள், இனி நாளை விளையாட வாருங்கள் என கேமில் வரும் அலெர்ட் மெசேஜ் ஸ்கிரீன் ஷாட் தான் தற்சமயம் வைரலாகி வருகிறது.

பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்

மேலும் இதுபோன்ற கட்டுப்பாடு பப்ஜி விளையாட்டுக்கு வருவது, மிகவும் வரவேற்க்க தக்கது, கண்டிப்பாக பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இதற்குமுன்பு பப்ஜி விளையாடுவதற்காக கைது செய்யப்படுவதிலிருந்து
கல்வி நிறுவனங்களில் தடைசெய்வது வரை நாம் அனைத்தையும் செய்திகளில் பார்த்தோம். எனினும் இந்த சமீபத்திய செய்தி அவற்றிற்கு எல்லாம் மகுடம் வைத்தது போல அமைந்துள்ளது. மாணவர் ஒருவர் தனது முதலாமாண்டு பியுசி பொருளாதார தேர்வின் விடைத்தாளில் "பப்ஜி கேமை விளையாடுவது எப்படி" என்பதை எழுதி தேர்வில் தோல்வியடைந்துள்ளார்.

 முதல் மதிப்பெண்

முதல் மதிப்பெண்

கடந்த ஆண்டு நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற இம்மாணவர், பப்ஜி விளையாட்டிற்கு
அடிமையானதுடன் அதற்கு விலையாக படிப்பின் மீதான கவனத்தை அளித்துள்ளார்.

ஆன்லைன் விளையாட்டில் தீவிரமாக மூழ்கிவிட்டதை ஒப்புக்கொண்ட அந்த மாணவன், தேர்வுகள் நெருங்கி வருவதை முழுவதுமாக மறந்துவிட்டார். போனுக்கு அடிமையானதை பெற்றோர் கண்டிக்கும்போதெல்லாம், தனது நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருப்பதாக
பொய்யும் கூறியுள்ளார்.

தோட்டத்திலேயே அமர்ந்து விளையாடுவேன்

தோட்டத்திலேயே அமர்ந்து விளையாடுவேன்

நான் மிகவும் சிரத்தையுடன் படிப்பவன். ஆனால் பப்ஜி விளையாட்டு நன்கு பொழுதுபோகும் வகையில் கவர்ச்சியாக இருந்ததால் கவர்ந்திழுத்து, விரைவில் அடிமையாக்கிவிட்டது. சில நேரங்களில் நான் பப்ஜி விளையாட்டை விளையாடுவதற்காக வகுப்பிற்கு செல்லாமல் அருகில் உள்ள தோட்டத்திலேயே அமர்ந்து விளையாடுவேன்" என அம்மாணவர் நம்மிடம் பகிர்ந்தார்.

தேர்ச்சி பெற முடியவில்லை

தேர்ச்சி பெற முடியவில்லை

தேர்விற்கு இன்னும் பதினைந்து நாட்கள் தான் உள்ளது என்பதை அவர் உணர்ந்தாலும், பொன்னாக நேரத்தை வீணடித்த பின்னர் இது மிகவும் தாமதமானது என்பதை அறிந்திருந்தார். அப்போதே பப்ஜி விளையாட்டை விளையாடுவதை நிறுத்தியிருந்தும், தனது பியுசி தேர்வில் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.

Best Mobiles in India

English summary
PUBG Mobile is testing a 6-hour per day limit in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X