Home
Gaming

ப்ளே ஸ்டேசனை அப்டேட் செய்யும் சோனி!

By Karthikeyan
ப்ளே ஸ்டேசனை அப்டேட் செய்யும் சோனி!

தனது ப்ளேஸ்டேசன் 3க்கு புதிய சாப்ட்வேரை அப்டேட் செய்ய இருக்கிறது சோனி. இந்த புதிய அப்டேட் ஒரு சில பாதுகாப்பு வசதிகளை வழங்க இருக்கிறது. இந்த சாப்டேவேர் அப்டேட் சோனி ப்ளேஸ்டேசன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது.

இதன் முக்கிய அப்டேட்டின்படி, ப்ளேஸ்டேசனில் உள்ள கம்பாட்டிபிளிட்டி வசதி கூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ப்ளேஸ்டேசன் 3லிருந்து ப்ளேஸ்டேசன் வீட்டாவிற்கு மிக எளிதாக பைல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும். பாடல்கள், படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை மிக எளிதாக இவற்றினிடையே அனுப்ப முடியும்.

மேலும் ப்ளேஸ்டேசன் வீட்டாவில் இருக்கும் தகவல்களை ப்ளேஸ்டேசன் 3ல் உள்ள ஹார்ட் டிஸ்க்கிலும் சேமிக்க முடியும். அதனால் ப்ளே ஸ்டேசனில் வீட்டாவில் சேமித்து வைக்கின்ற தகவல்கள் ப்ளேஸ்டேசன் 3ன் ஹார்ட் டிஸ்க்கிலும் தானாகவே சேமிக்கப்படும். மேலும் ப்ளேஸ்டேசன் வீட்டா சாப்ட்வேர் மூலம் சாப்ட்வேர் சிஸ்டத்தை அப்டேட் செய்யவும் முடியும். அதற்காக ப்ளேஸ்டேசன் 3 மற்றும் ப்ளேஸ்டேசன் வீட்டா வீட்டாவையும் யுஎஸ்பி கேபிளால் இணைக்க வேண்டும்.

மேலும் இந்த ப்ளேஸ்டேசனில் அப்ஸ்கேலர் அவுட்புட் மற்றும் சினிமா கன்வர்சனுக்கான ப்ளூரே டிஸ்க்கும் அப்டேட் செய்யப்படுகிறது. அதுபோல் ஆட்டோமேட்டிக் அப்டேட்டுக்கான வசதியும் இந்த ப்ளேஸ்டேசனில் இருக்கிறது. அதுபோல் இரண்டு புதிய மொழிகளின் சப்போர்ட்டும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதாவது போர்ச்சுகீஸ் பிரசில் மற்றும் இங்கிலாந்து ஆங்கிலம் ஆகிய மொழிகள் அப்டேட் செய்யப்பட்டிருக்கின்றன.

பல வகைகளில் இந்த அப்டேட்டுகளைச் செய்ய முடியும். அதாவது ப்ளேஸ்டேசன் 3ல் உள்ள சிஸ்டம் ஆப்சனைப் பயன்படுத்தி இந்த அப்டேட் செய்யலாம். அதாவது இணையதளத்தைப் பயன்படுத்தி இந்த அப்டேட்டைச் செய்யலாம். அடுத்ததாக கணினியைப் பயன்படுத்தியும் இந்த அப்டேட் செய்ய முடியும். ஆப்டிக்கல் டிஸ்க் மூலமும் இந்த அப்டேட் செய்ய முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X