விரைவில் சோனியின் சூப்பர் ஸ்லிம் ப்ளே ஸ்டேஷன்3!

Posted By: Karthikeyan
விரைவில் சோனியின் சூப்பர் ஸ்லிம் ப்ளே ஸ்டேஷன்3!

சோனியின் ப்ளேஸ்டேசன்களுக்கு உலக அளவில் அமோக வரவேற்பு உள்ளது. சோனியின் வீடியோ விளையாட்டு சாதனமான இந்த ப்ளேஸ்டேசனுக்கு ஏராளமான தீவிர ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சோனியின் புதிய விளையாட்டு சாதனமான பிஎஸ்3 விரைவில் வரும் என்று விளையாட்டு பிரியர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஆனால் புதிய பிஎஸ்3 விளையாட்டு சாதனத்தை இன்னும் சோனி உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சோனியின் புதிய சூப்பர் ஸ்லிம் பிஎஸ்3, அடுத்த மாதம் விற்பனைக்கு வந்துவிடும் என்று பரவலாக வதந்திகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. மேலும் இந்த பிஎஸ்3 சூப்பர் ஸ்லிம்மாக இருக்கும் என்றும் செய்திகள் வருகின்றன. அதோடு இந்த பிஎஸ்3 விளையாட்டு சாதனம் 150 அமெரிக்க டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ.8,500க்கு விற்கப்படும் என்றும் வதந்திகள் வருகின்றன.

சில வாரங்களுக்கு முன்புதான் இந்த சூப்பர் ஸ்லிம் பிஎஸ்3யின் படங்கள் இணைய தளங்களில் வெளியிடப்பட்டன. அதன்படி இந்த புதிய பிஎஸ்3, தற்போது இருக்கும் பிஎஸ்3யைவிட மிகவும் ஒல்லியாக இருக்கிறது. மேலும் இந்த புதிய சாதனம் 16ஜிபி சேமிப்புடன் வருகிறது.

இந்த சூப்பர் ஸ்லிம் பிஎஸ்3 அடுத்த மாதமே விற்பனைக்கு வந்துவிடும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்த ஆண்டின் இறுதியில்தான் வரும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.

தற்போது உள்ள பிஎஸ்3 இந்தியாவில் ரூ.16,990க்கு விற்கப்படுகிறது. மேலும் இது 160ஜிபி எச்டிடியைக் கொண்டிருக்கிறது. ஆனால் 4ஜிபி சேமிப்புடன் வரும் எக்ஸ்பாக்ஸ் 360 ரூ.14,990க்கு விற்கப்படுகிறது. அதனால் புதிய சூப்பரி ஸ்லிம் பிஎஸ்3 குறைந்த விலைக்கு வரும் என்று தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்