மெமரி வசதியுடன் வரும் புதிய வீடியோ கேம் மவுஸ்!

Posted By: Karthikeyan
மெமரி வசதியுடன் வரும் புதிய வீடியோ கேம் மவுஸ்!

போர்ட்ரோனிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் ஒரு புதிய வயர்லஸ் மவுஸை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த மவுசிற்கு இமூஸ் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த மவுசின் விலை ரூ.799 ஆகும். இந்த மவுசை இயக்குவதற்கு மிகவும் லகுவாக இருக்கும் அதே நேரத்தில் மிகவும் வசதியாகவும் இருக்கும்.

இந்த மவுசின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இதில் சேமிப்பு வசதியும் உள்ளது. அதற்காக ஒரு யுஎஸ்பி துவாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அடுத்ததாக இந்த மவுஸ் வீடியோ கேம் பிரியர்கள் மற்றும் டிசைனர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் வலது மற்றும் இடது க்ளிக் பட்டன்கள் மிக வேகமாக இயங்கக்கூடியவை.

இந்த இமூஸ் மவும் மிகவும் கையடக்கமானது. அதனால் இதை மிகவும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இந்த மவுஸ் கருப்பு மற்றும் ஆரஞ்சு, கருப்பு மற்றும் ஊதா மற்றும் வெள்ளை மற்றும் பிங் ஆகிய வண்ணக் கலவைகளில் வருகிறது. அதனால் பார்ப்பதற்கு இந்த மவும் அற்புதமாக இருக்கும்.

மேலும் இந்த மவுஸில் ஒரு இன் பில்ட் சூப்பர் மினி நானோ யுஎஸ்பி ரிசிவர், மேட் யுவி பெயிண்டிங் மற்றஉம் எபிஎஸ் மெட்டீரியல், 2.4 ஜிஹெர்ட்ஸ ஆன்டி இன்டர்பெரனஸ் எஎப்எச் போன்ற வசதிகளும் உள்ளன.

மேலும் இந்த மவுசைப் பற்றி விவரமாக அறிய http://www.portronics.com என்ற இணையதளத்திற்கு செல்லலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot