Home
Gaming

ஆன்ட்ராய்டு மொபைல்களில் ப்ளே ஸ்டேசனை வழங்கும் சோனி!

By Karthikeyan
ஆன்ட்ராய்டு மொபைல்களில் ப்ளே ஸ்டேசனை வழங்கும் சோனி!

எலெக்ட்ரானிக்ஸ் துறையில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கும் சோனி நிறுவனம் ஒரு புதிய ப்ளேஸ்டேசன் மொபைலைக் களமிறக்க இருக்கிறது. அதாவது ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கும் மொபைல்களில் ப்ளேஸ்டேசன் தொழில் நுட்ப வசதிகளை வழங்க இருக்கிறது. இதன் மூலம் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கும் மொபைல்களில் சோனியன் ப்ளேஸ்டேசன் தொழில் நுட்ப வசதிகளைப் பெறலாம்.

ப்ளேஸ்டேசன் கணினியில் இருப்பது போல ஆன்ட்ராய்டு மொபைல்களைப் பயன்படுத்துவோருக்கு ஒரு பிஎஸ்என் ஐடி வழங்கப்படும். இதன் மூலம் சோனியின் ப்ளேஸ்டேசன் ஸ்டோரிலிருந்து ஆன்ட்ராய்டு மொபைல்களில் விரும்பும் விளையாட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த ப்ளேஸ்டேசன் சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்கு சோனி ஏராளமான கட்டுப்பாடுகளையும் விதிக்க இருக்கிறது. குறிப்பாக சோனியின் ப்ளேஸ்டேசன் சான்றிதழ் பெற்ற ஆன்ட்ராய்டு மொபைல்களில் மட்டுமே இந்த ப்ளேஸ்டேசன் வசதிகளைப் பெற முடியும். குறிப்பாக சோனி மொபைல்களைப் பயன்படுத்துவோருக்கு இந்த ப்ளேஸ்டேசன் வசதி மிக எளிதாகக் கிடைத்துவிடும்.

சோனி மொபைல்களைக் தவிர்த்து எச்டிசி ஒன் எக்ஸ் மற்றும் எச்டிசி ஒன் வி போன்ற மொபைல்களும் சோனியின் ப்ளேஸ்டேசன் சான்றிதழ் உரிமையைப் பெற்றுள்ளன. சமீபத்தில் விக்கிபேட் மற்றும் ஆசஸ் நிறுவனங்களும் சோனியன் ப்ளேஸ்டேசன் மொபைலோடு ஒப்பந்தம் செய்திருக்கின்றன. ஆகவே ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் பேட் மொபைலும் இந்த ப்ளேஸ்டேசன் வசதிகளைப் பெறும் என்று நம்பலாம்.

இந்த சோனி ப்ளேஸ்டேசன் மொபைல் வந்தபின் சோனியின் பிஎஸ்ஒன் க்ளாசிக்குகளுக்கு பிரியாவிடை கொடுக்க நேரிடும் என்று தெரிகிறது. இந்த பிஎஸ்ஒன் க்ளாசிக் சோனி ப்ளேஸ்டேசனின் விளையாடுவதற்கு பக்கபலமாக இருந்து வந்தது. எனினும் இந்த ப்ளேஸ்டேசன் மொபைலை இன்னும் சோனி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X