Home
Gaming

70 மில்லியன் ப்ளேஸ்டேசன் 3 வீடியோகேம் சாதனங்களை விற்றிருக்கும் சோனி

By Karthikeyan
70 மில்லியன் ப்ளேஸ்டேசன் 3 வீடியோகேம் சாதனங்களை விற்றிருக்கும் சோனி

சோனியின் வீடியோ கேம் சாதனமான ப்ளேஸ்டேசன் உலக அளவில் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த ப்ளேஸ்டேசனுக்கு உலக அளவில் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இறுதியாக சோனி ப்ளேஸ்டேசன் 3 என்ற தனது புதிய கேமிங் சாதனத்தைக் களமிறக்கி இருந்தது. இந்த ப்ளேஸ்டசேன் உலக ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனால் இந்த ப்ளேஸ்டேசன் விற்பனையிலும் சாதனை படைத்தது.

ஏறக்குறைய 70 மில்லியன் ப்ளே ஸ்டேசன் 3 வீடியோ கேம் சாதனங்கள் இதுவரை விற்பனையாகி இருப்பதாக சமீபத்தில் சோனி அறிவித்திருக்கிறது. இந்த சாதனை விற்பனை மூலம் மைக்ரோசாப்ட்டின் எக்ஸ்பாக்ஸ் வீடியோ கேம் சாதனங்களின் விற்பனையை சமன் செய்திருப்பதாகவும் சோனி அறிவித்திருக்கிறது.

அதோடு மட்டும் அல்லாமல் 15 மில்லியன் ப்ளேஸ்டேசன் மூவ் மோசன் கன்ட்ரோலர்களும் விற்று இருப்பதாக சோனி தெரிவித்திருக்கிறது. 6 வயதாகும் இந்த ப்ளே ஸ்டேசன் இன்னும் ரசிகர்கள் மத்தியில் முக்கிய இடத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X