ஆன்லைவ் மற்றும் அவ்யா கூட்டணி மகுடம் சூடுமா?

சிறந்த வீடியோ விளையாட்டு சாதனங்களைத் தயாரித்து வரும் அவ்யா நிறுவனம் சமீபத்தில் ஆன்லைவ் நிறுவனத்தோடு ஒரு வர்த்தக கூட்டணியை அமைத்திருக்கிறது. இந்த கூட்டணியின் மூலம் ஆன்லைவின் க்ளவுட் விளையாட்டுகளை அவ்யாவின் ஆன்ட்ராய்டு வீடியோ விளையாட்டு சாதனங்களில் கொண்டுவர முடியும். அதற்காக அவ்யாவின் ஆன்ட்ராய்டு வீடியோ விளையாட்டு சாதனங்களில் உள்ள எந்த ஒரு ஹார்ட்வேரையும் மாற்றத் தேவையில்லை. அதோடு புதிய ஹார்ட்வேர்களையும் புகுத்தத் தேவையில்லை.
ஆன்லைவ் பல ஏராளமான வீடியோ விளையாட்டுகளைத் தயாரித்து வைத்திருக்கிறது. அதன் விளையாட்டுகளுக்கு உலக அளவில் மோசமில்லா அளவிற்கு வரவேற்பு உண்டு. இந்த புதிய கூட்டணியின் மூலம் ஆன்லைவின் புதிய விளையாட்டுகள் அதிக அளவில் விற்பனையாகும் என்று ஆன்லைன் நம்புகிறது. அதே நேரத்தில் தனது ஆன்ட்ராய்டு விளையாட்டு சாதனங்கள் பெருமளவில் விற்பனையாகும் என்று அவ்யாவும் நம்புகிறது.
ஆன்லைவ் நிறுவன விளையாட்டுகளுக்கு குறைந்த அளவு வாடிக்கையாளர்களே உண்டு. அதேபோல் அவ்யாவின் விளையாட்டு சாதனங்களுக்கும் குறைந்த அளவே வாடிக்கையாளர்கள் உண்டு. இந்த புதிய கூட்டணி இந்த இரண்டு நிறுவனங்களின் வெற்றிக்கு உதவும் என்று இந்த இரண்டு நிறுவனங்களும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிக்கின்றன.
ஆன்லைவ் வீடியோ கேம் லைப்ரரி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே உல்ளன. ஆன்லைவ் கேம்களை விளையாட வேண்டும் என்றால் தாறுமான வேகம் கொண்ட இணையதள இணைப்பு வேண்டும். அப்படிப்பட்ட இணைப்பு இல்லையானால் அதன் கேம்களை விளையாட முடியாது. அதனால் அதிகமான வாடிக்கையாளர்கள் இந்த கேம்களை விளையாட முடியவில்லை.
ஆனால் இந்த புதிய கூட்டணி மூலம் ஆன்லைவ் விளையாட்டுகளும் அவ்யாவின் சாதனங்களும் பெரிய அளவு வெற்றி பெறும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications