Home
Gaming

விலை குறையும் நிண்டின்டோ வீடியோ கேம் சாதனங்கள்

By Karthikeyan
விலை குறையும் நிண்டின்டோ வீடியோ கேம் சாதனங்கள்

நிண்டின்டோவின் கேமிங் சாதனங்கள் உலக அளவில் பிரபலமானவை. இந்த கேமிங் சாதனங்களுக்கு உலக அளிவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. அதிலும் குறிப்பாக நிண்டின்டோவின் டிஎஸ்ஐ மற்றும் டிஎஸ்ஐ-எக்ஸ்எல் ஆகிய கேமிங் சாதனங்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றன.

மேற்சொன்ன இந்த 2 கேமிங் சாதனங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் இந்த இரண்டின் விலையையும் நிண்டின்டோ கணிசமாக குறைக்க இருக்கிறது. இதன் மூலம் நிண்டின்டோவின் ரசிகர்கள் ஆனந்த கூத்தாடுவார்கள் என்பது நிச்சயம்.

இந்த விலைக் குறைப்பு மே மாதம் 20 முதல் அமலுக்கு வருகிறது. அந்த வகையில் நிண்டின்டோ டிஎஸ்ஐ-எக்ஸ்எல் ரூ.7000க்கும், நிண்டின்டோ டிஎஸ்ஐ ரூ.6000க்கும் விற்கப்படும். இது பழைய விலையைவிட மிகக் குறைவு அதன் மூலம் இதுவரை இந்த கேமிங் சாதனங்களை வாங்க முடியாதவர்கள் இனி எளிதாக வாங்க முடியும் என்று நிண்டின்டோ நம்புகிறது.

மேலும் இந்த கேமிங் சாதனங்களில் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த சாப்ட்வேர்களும் அப்டேட் செய்யப்படுகின்றன. குறிப்பாக பிலிப்நோட் ஸ்டூடியோ, நிண்டின்டோ டிஎஸ்ஐ கேமரா மற்றும் நிண்டின்டோ டிஎஸ்ஐ ஒலி அமைப்பு போன்ற சாப்ட்வேர்கள் புதிதாக இணைக்கப்படுகின்றன.

அதுபோல் டிஎஸ்ஐ-எக்ஸ்எல் கேமிங் சாதனத்தில் ப்ரைன் ஏஜ் எக்ஸ்ப்ரஸ்: ஆர்ட்ஸ் & லெட்டர்ஸ் மற்றும் மாத் மற்றும் போட்டோ க்ளாக் போன்ற புதிய கேமிங் அப்ளிகேசன்களும் இணைக்கப்படுகின்றன.

மேலும் கேம் பிரியர்களின் மன நிலையை கருத்தில் கொண்டு நிண்டின்டோ நவீன பதிவிறக்கம் செய்யப்பட்ட கேம்களையும் நிண்டின்டோ வழங்குகிறது. அதோடு பிரபல கேமான மரியோவின் பல லெவல்கள், ப்ரபசர் லேய்டன் மற்றும் லாஸ்ட் ஸ்பெக்டர் போன்ற கேம்களையும் இந்த சாதனங்களில் பார்க்கலாம்.

அதுபோல் வரும் ஜூன் 18 முதல் பதிவிறக்கம் செய்யக் கூடிய போக்மன் கான்குவஸ் என்ற புதிய கேமையும் நிண்டின்டோ தனது கேமிங் சாதனங்களில் இணைத்திருக்கிறது. எனவே நிண்டின்டோவின் கேமிங் சாதனங்கள் வரும் காலத்தில் விற்பனையும் சாதனை படைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X