வீடியோ விளையாட்டில் திளைக்க அடுத்து ஓர் புதிய வரவு!

வீடியோ விளையாட்டுச் சாதன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிண்டின்டோ நேற்று தனது புதிய விளையாட்டுச் சாதனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த புதிய விளையாட்டு சாதனத்திற்கு 3டிஎஸ் எல்எல் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த சாதனம் ஜப்பானில் எல்எல் என்றும் மேற்கத்திய நாடுகளில் எக்ஸ்எல் என்று அழைக்கப்படும்
இந்த புதிய 3டிஎஸ் எல்எல் சாதனம் வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு மற்றும் வெள்ளி மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களில் மிக அழகாக வருகிறது. வரும் ஜூலை 28ல் இந்த சாதனம் விற்பனைக்கு வர இருக்கிறது. ஜப்பானில் இது 18,900 யென்னுக்கு விற்கப்படும். அதுபோல் இந்த சாதனம் வரும் ஆகஸ்ட் 19ல் அமெரிக்காவில் விற்பனைக்கு வர இருக்கிறது. அங்கு இந்த சாதனம் 199.99 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படும்.
அதோடு இந்த சாதனத்தை குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பதற்காக இந்த சாதனத்தோடு ஏசி அடாப்டர் வழங்கப்படமாட்டாது. ரசிகர்கள் தனியாகத்தான் இந்த அடாப்டரை வாங்க வேண்டும்.
இந்த 3டிஎஸ் எக்ஸ்எல் சாதனத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் நிண்டின்டோவின் பழைய வீடியோ சாதனத்தை விட இது மிகவும் அகன்ற திரையுடன் வருகிறது. ஏனெனில் பழைய சாதனம் 3.53 இன்ச் அளவு திரையையே கொண்டிருந்தது. ஆனால் புதிய சாதனம் 4.18 இன்ச் அளவுடன் சற்று பெரிய திரையுடன் வருகிறது.
மேலும் இந்த புதிய வீடியோ சாதனத்தில் 3டி விளையாட்டுகளை விளையாடினாலும் இந்த சாதனம் 3.5 முதல் 6.5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்கும். சாதாரண விளையாட்டுகளை விளையாடும் போது அது 5 முதல் 8 மணி நேர இயங்கு நேரத்தை வழங்கும். அதோடு இந்த சாதனம் 4ஜிபி எஸ்டி கார்டுடன் வருகிறது.
ஆனால் இதி்ல் ஒரே ஒரு அனலாக் குச்சி மட்டுமே உள்ளது. இரண்டு அனலாக் குச்சிகளுடன் இந்த சாதனம் வந்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும். எப்படி இருந்தாலும் நிண்டின்டோவின் இந்த புதிய விளையாட்டு சாதனம் ரசிகர்களை தனது இரும்பு கரங்களுக்குள் கட்டிப் போட்டுவிடும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications